புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!

டெல்லி: வெளிநாடுகளை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கும் வகையில், குறிப்பாக எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை நிர்வகிக்கும் வகையில் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால் இந்த கொள்கை மாற்றம் சீன நிறுவனங்களின் வருகைக்கும் வழிவகுத்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகிய மூன்றிலும் சீனா தான் முதலிடத்தில் இருக்கிறது. சர்வதேச ஆற்றல் முகமையின் தகவல்களின்படி உலக அளவில் தீனா தான் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கான ஏற்றுமதியில் முதலிடத்தை வகிக்கிறது.

புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!


2022 ஆம் ஆண்டில் உலக அளவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களில் 60% சீனாவில் உற்பத்தியானவை ஆகும். மேலும் தற்போது உலக அளவில் சாலைகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் கார்களில் பாதிக்கும் மேற்பட்ட கார்கள் சீனாவில் தான் உள்ளன.

எனவே இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன கொள்கை மாற்றி அமைக்கப்படும் போது எளிதாக சீன நிறுவனங்கள் உள்ளே நுழைய கூடும் என்ற கவலைகள் எழுவது இயல்பு தான்.

ஆனால் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யப்படுவது தடுக்கப்படும் என மத்திய அரசின் மூத்த அதிகாரி மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்நிய நேரடி முதலீடுகள் என்பது பல கட்ட பரிசீலனைக்கு பின்பே அனுமதிக்கப்படும் ,அந்த வகையில் சீனாவின் பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் ஆலையை நிறுவ பல கட்ட சோதனைகளை கடந்து வர வேண்டியது இருக்கும் என கூறியுள்ளார் .

குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருத்தி அமைக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில், இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்திருக்கும் நாடுகள் அல்லது இந்தியாவில் தொழில் தொடங்கும் நிறுவனத்தின் மூலம் லாபம் காணும் நபர்கள் இந்தியாவில் எல்லையே பகிர்ந்து இருக்கும் நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தால் அந்த நிறுவனங்கள் அரசு வழியாக மட்டுமே தங்களது முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

எனவே இந்த கொள்கை மாற்றம் சீன நிறுவனங்கள் இந்தியாவில் வந்து தொழில் தொடங்குவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது .

சீனாவின் பிஒய்டி நிறுவன எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் அதற்கான இறக்குமதி வரி என்பது அதிகம். ஆனால் அந்த நிறுவனம் இந்தியாவில் வந்து முதலீடு செய்து ஆலையை நிறுவுவதற்கான அனுமதியை வழங்காது என மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருகை தராமல் இருந்தது. இந்நிலையில் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றால் , எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் மூன்றாண்டுகளுக்குள் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி வாகன உற்பத்தியை தொடங்க வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+