டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிற. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான சம்பளம் மாற்றியமைக்கப்படுகிறது.
அகவிலைப்படி: இந்த இடைப்பட்ட காலத்தில் விலைவாசி உயர்வை ஈடுசெய்ய ஏதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்படுகிறது. அடிப்படை சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அகவிலை படியாக வழங்குகிறார்கள். இது ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படுவதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசியை எதிர்கொள்ள கூடிய அளவுக்கு ஆண்டுதோறும் சம்பளத்தில் ஒரு கணிசமான தொகை கிடைக்கிறது .

ஆண்டுக்கு இரண்டு முறை: ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்பது அறிவிக்கப்படும். ஆனால் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவி பொதுமுடக்கம் அமலில் இருந்தது. அந்த சமயத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கக்கூடிய அகவிலை படியை அரசு அறிவிக்கவில்லை.
3 முறை நிறுத்தி வைப்பு: கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்ததையும் அரசுக்கு அதிக செலவு ஏற்பட்டதை சுட்டிக்காட்டியும் அரசு 3 அகவிலைப்படிகளை வழங்காமல் நிறுத்தி வைத்தது. அதாவது தொடர்ந்து 18 மாதங்களுக்கு அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. 2020 ஜனவரி, 2020 ஜூலை, 2021 ஜனவரி ஆகிய மூன்று அகவிலைப்படிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
அரசின் பதில் என்ன?: இந்த 18 மாத காலத்திற்கான அகவிலைப்படியை அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சங்கம் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த கேள்வி நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து இருக்கும் நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் நிதிச் சுமையை குறைப்பதற்காக அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருந்தது இந்த மூன்று அகவிலைப்படி உயர்வையும் மீண்டும் வழங்குவதற்கான எந்த ஒரு பரிசீலனையும் தற்போது அரசிடம் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
தீபாவளிக்கு அகவிலைப்படி: 2020- 21ஆம் நிதி ஆண்டில் கொரோனா காலத்தில் அரசின் நிதி பற்றாக்குறை 9.2 சதவீதமாக உயர்ந்தது தற்போது அது 4.4 சதவீதமாக குறைந்து இருக்கிறது இருந்தாலும் அரசு அந்த நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி வழங்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என கூறியிருக்கிறார் . தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அவர்களுடைய சம்பளத்தில் 55 சதவீத தொகையை அகவிலைப்படியாக பெறுகின்றனர். வரும் தீபாவளி ஒட்டி ஊழியர்களுக்கு மேலும் ஒரு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications