கடந்த சில காலாண்டுகளாக சீனாவில் மந்தமான நிலையே இருந்து வருகின்றது. தொடர்ந்து கொரோனாவின் பிடியில் சிக்கி சீரழிந்து வந்த சீனாவில், பரவிய கொரோனா பெருந்தொற்றினை குறைக்க அரசு ஜீரோ கோவிட் பாலிசியினை அமல்படுத்தியிருந்தது. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் என்பது மிக மோசமான நிலையை எட்டியது.
தொழில்துறை வளர்ச்சியானது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இதனால் சீனாவில் அன்னிய முதலீடுகள் என்பது வெகுவாக குறைந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் பெரியளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன.
இந்தியாவில் அன்னிய முதலீடு
இந்த முதலீட்டில் கணிசமாக இந்தியாவின் பக்கம் திரும்பியது எனலாம். ஏனெனில் சர்வதேச நாடுகள் பலவும் மோசமான சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியா மட்டும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. இது அன்னிய முதலீட்டாளர்களை இந்தியர்களின் பக்கம் திருப்பியது எனலாம்.
மீண்டும் முதலீடுகள் அதிகரிப்பு
ஆனால் சீன அரசு தங்களது கட்டுப்பாடுகளில் பெரும் தளர்வினை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது சீனாவின் துவண்டு போன தொழில் துறையானது மீளத் தொடங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சி குறித்தான காரணிகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. இதன் காரணமாக சீனாவில் மீண்டும் முதலீடுகள் அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
முதலீடுகள் வெளியேறுமா?
இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் முதலீடுகள் வெளியேறலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இம்மாதத்தில் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் பெரியளவில் வெளியேறியுள்ளது. இதன் காரணமாகத் தான் இந்திய சந்தை மற்றும் பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளது.
சீனா இந்தியா என இருபெரும் பொருளாதார நாடுகளும் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. .
ஜனவரியில் FPI வெளியேற்றம்
ஏற்கனவே ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் 18,800 கோடி ரூபாயாக வெளியேறியுள்ளது. இது மாத அடிப்படையில் பார்க்கும்போது ஜூன் 2022ல் 50,203 கோடி ரூபாய் மிக மோசமாக வெளியேறியது. எனினும் அதன் பிறகு அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக இருந்தனர். அதன் பிறகு டிசம்பர் மாதத்தில் 11,119 கோடி ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 36,239 கோடி ரூபாயாக முதலீடுகள் செய்யப்பட்டது.
முதலீடுகள் வெளியேறலாம்
இந்தியாவில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் மீடியம் டெர்மில் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், ரெசசன் வரலாமோ என்ற அச்சம் உள்ளது. இது தொடர்ந்து பணவீக்கம் குறையும் வரையில் இனியும் அதிகரிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. தொடர்ந்து பொருளாதாரத்தில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications