டெல்லி: இந்தியாவில் இப்போது கோடைக் காலம் வந்துவிட்ட நிலையில், கஸ்டமர் டூரபிள் பொருட்கள் எனப்படும் மின்விசிறிகள், ஏசிக்கள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏர் கூலர்கள் விற்பனை அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.
இந்த கோடைக் காலத்தில் இந்தியாவில் பல பகுதிகளில் வெப்பம் இயல்பைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப தமிழ்நாடு உட்பட நாட்டின் பல இடங்களில் வெப்பம் அசால்டாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்தது.
இதனால் கோடைக் காலத்தில் மின்விசிறிகள், ஏசிக்கள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏர் கூலர்கள் விற்பனை அதிகரிக்கும் என்றே கூறினர். அதற்கேற்ப தொடக்கத்தில் இந்த பொருட்களின் விற்பனை மெல்ல அதிகரிக்கவே செய்தது.

கோடை விற்பனை: கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் டீலர்கள் ஏசி இன்வென்டரிக்களை உருவாக்கினர். தேவையான ஏசி ஸ்டாக்குகளை வைத்தனர். ஏசிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என சம்மரில் விற்கும் அனைத்து பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்றே டீலர்கள் நம்பினர்.
இருப்பினும், சமீபத்தில் திடீரென பெய்த மழை மற்றும் நிச்சயமற்ற தன்மை இரண்டும் சேர்ந்து இந்த காலாண்டில் கஸ்டமர் டூரபிள் மார்க்கெட் விற்பனையைச் சற்று குறைத்துள்ளதாகவே தெரிகிறது. கோடைக் காலம் வலுவாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அதன் விற்பனை அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது.
அதிகரிக்கவில்லை: பொதுவாக மார்ச் மாத இறுதியில் இதுபோன்ற பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். ஆனால், இப்போது பெய்த திடீர் மழை இதன் விற்பனையைப் பாதித்துள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ச்சியான வெப்பம் நிலவியது. இதனால் வழக்கமாக அதிகரிப்பதைப் போல கஸ்டமர் டூரபிள் பொருட்கள் விற்பனை அதிகரிக்கவில்லை.
இப்போது இப்படி இருந்தாலும் கூட கோடைக் காலத்தில் வெப்பம் அதிகரிக்கவே செய்யும் என்று கூறப்பட்டுள்ளதால், இந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கவே செய்யும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன. எனவே, வரும் காலத்தில் இந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது.
புதிய முறை: இது ஒரு மக்கம் இருக்க இப்போது பேன்களுக்கு புதிய BEE நட்சத்திர லேபிளிங் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. BEE ஸ்டார் லேபிளிங் முறை என்பது இந்திய எரிசக்தித் திறன் பணியகத்தால் வழங்கப்பட்ட கட்டாய வழிகாட்டுதல்கள் ஆகும்.. இது கடந்த ஜனவரி 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்டது. இதை வைத்து மின் பயன்பாடு குறைவாக இருக்கும் பேன்ககளை நம்மால் கண்டறிய முடியும்.

உதாரணமாக ஸ்டார் மதிப்பீடு இல்லாத பேன் சுமார் 75 வாட் பயன்படுத்தும். அதேநேரம் ஒரு ஸ்டார் கொண்ட பேனில் மின் பயன்பாடு சுமார் 30% குறையும். அதாவது 52 வாட்களுக்கு மேல் இந்த மின் நுகர்வு இருக்காது. அதேபோல், ஐந்து ஸ்டார் பேன்களில் இது 50%க்கும் அதிகமாக இருக்கும். அதாவது ஸ்டார் ரேட்டிங்குகள் அதிகரித்தால் மின்சார சேமிப்பும் அதிகரிக்கும்.
விற்பனை உயரும்: இருப்பினும், இந்த ஸ்டார் பேன்கள் விற்பனை பெரியளவில் அதிகரிக்கவில்லை. ஸ்டார் ரேட் பேன்கள் விற்பனையை அதிகரிக்க பிராண்டுகள் 4% முதல் 6% வரை தள்ளுபடி வழங்கி வருகிறது. இருந்த போதிலும், விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
நீண்ட கால நோக்கில் இந்த வகை பேன்கள் விற்பனை அதிகரிக்கும் என்ற போதிலும், இப்போது இதன் விற்பனை பெரியளவில் இல்லை. இது சிறு சிறு நிறுவனங்களை நிச்சயம் கடுமையாகப் பாதிக்கவே செய்யும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications