மீண்டும் டிரெண்டாக போகும் மண்ணெய் ஸ்டவ்..? இதென்னப்பா புது கதையா இருக்கு?!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எரிபொருள் செலவுகளை குறைக்கவும், எரிபொருள் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு, சிஎன்ஜியில் பயோகேஸ் கலப்பு, டீசலில் ஐசோபியூட்டைல் கலப்பு என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் நீட்சியாக மத்திய அரசு எல்பிஜி இறக்குமதியை குறைக்கும் விதமாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சம் நாடாளுமன்றத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனால்-ஐ cooking fuel ஆக பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் டிரெண்டாக போகும் மண்ணெய் ஸ்டவ்..? இதென்னப்பா புது கதையா இருக்கு?!

இந்தியாவில் தற்போது எத்தனால் உற்பத்தி அதிகமாக இருக்கும் காரணத்தால் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை இணைந்து உருவாக்கிய LPG Equipment Research Centre (LERC) அமைப்பு எத்தனாலை எப்படி மாற்று மற்றும் பாதுகாப்பான சமையல் எரிபொருளாக பயன்படுத்துவது என்பதை ஆய்வு செய்து வருகிறது.

மண்ணெய் மற்றும் எத்தனால் ஆகிய இரண்சு எரிபொருளும் கிட்டத்தட்ட ஓன்று தான், ஆனால் எத்தனால் பயன்படுத்தும் போது சூடாகும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும். ஆனால் மண்ணெய் காட்டிலும் எத்தனால் தூய்மையான எரிபொருள், புகை இருக்காது.

இதேபோல் மண்ணெய் ஸ்டவ் பயன்படுத்தும் போது பல ஆபத்துக்களும், சிக்கல்களும் இருக்கும் காரணத்தால் இதை தவிர்க்கும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்க LERC அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பெட்ரோலில் எத்தனாலை 20 சதவீதம் மேல் கலக்குவதற்கு எவ்விதமான திட்டமும் இல்லை, இதேபோல் டீசலில் எத்தனால் கலக்கும் திட்டங்கள் தற்போது இல்லை என தெளிவுப்படுத்தியிருந்சாலும், இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இந்தியா எத்தனாலை இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருவதாக வந்த தகவலையும் முழுமையாக மறுத்துள்ளது. இதேபோல் E20 பெட்ரோல் குறித்து மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் இருந்தாலும், மத்திய அரசு கலப்பின அளவீட்டை குறைப்பதில் எவ்விதமான மாற்றத்தையும் இதுவரையில் அறிவிக்கவில்லை.

இதேபோல் எத்தனால் கலப்பின் மூலம் அரசுக்கு இறக்குமதி செலவும், டாலர் இருப்பும் சேமிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. இது Win - Win முறை என அரசு கூறினாலும், மக்கள் மத்தியில் எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக வாகனங்களின் மைலேஜ் குறைவது மற்றும் வாகனங்களின் இன்ஜின் மற்றும் இதர உதிரிபாகங்கள் பாதிக்கப்படுவது பெரும் விவாத பொருளாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+