டெல்லி: மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் பாஸ்டேக்கை (FASTag) கட்டாயமாக்க உள்ளது.
இருப்பினும், வாகன ஓட்டுநர்களுக்கு இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதுகுறித்த ஒரு விளக்கம் இதோ:
உங்கள் வாகன, விண்ட் ஸ்கிரீனில் பாஸ்டாக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதும், அதில் வழங்கப்பட்ட தகவல்கள் டோல் பிளாசாவில் உள்ள ஆண்டெனாவால் டிகோட் செய்யப்பட்டு, பாஸ்டேக் கணக்கிலிருந்து கட்டணத் தொகை வரவு வைத்துக்கொள்ளப்படும். இதற்கு ஏற்ப, வாகன ஓட்டிகள், FASTag அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இரட்டிப்பு கட்டணம்
தேசிய மின்னணு கட்டண வசூல் (NETC) திட்டத்தின் கீழ், FASTags வழியாக மட்டுமே டோல்கேட்களில் பணம் செலுத்த வேண்டும். வேறு எந்த வகையிலாவது, அதாவது ரொக்கம், அல்லது டெபிட்-கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவதாக இருந்தால், கட்டண தொகை இரட்டிப்பாக வசூலிக்கப்படும்.
வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதிசெய்வதும், பணமில்லா பேமென்ட்டை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் நோக்கமாக இருப்பதால், டோல் பிளாசாக்களில் உள்ள அனைத்து பாதைகளிலும், பாஸ்டேக் வசதி கொண்டுவரப்படுகிறது. அதேநேரம், ஒரு பாதை மட்டும், ஹைப்ரிட் பாதையாக வைக்கப்படும். அதாவது, பாஸ்ட்டேக்குடன், பிற வகையில் கட்டணம் செலுத்துவோரும் இந்த வழியில் போகமுடியும். ஆனால், பிற வகையில் பணம் செலுத்தினால், இரட்டிப்பாக வசூலிக்கப்படும்.
ரீசார்ஜ் அவசியம்
ரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை (RFID) FASTag பயன்படுத்தி செயல்படுறது. இது தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாக்களில், வாகனம் கடந்து செல்லும்போது, அதற்கான, கட்டணத்தை தானாக கழித்துக் கொள்ளும். உங்களது, ப்ரீபெய்ட் அல்லது சேமிப்பு / நடப்புக் கணக்குடன் பாஸ்டேக் கணக்கு, இணைக்கப்பட வேண்டும். ப்ரீபெய்ட் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதை முன்கூட்டியே, ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
எங்கே வாங்கலாம்
உங்கள் வாகனத்திற்கு பாஸ்டேக் வாங்குவது மிகவும் எளிதானது. புதிய வாகனம் வாங்கும்போது, ஷோரூமிலேயே பாஸ்ட்டேக் வழங்கப்படும். பழைய வாகனங்களுக்கு, NHAI டோல் பிளாசாஸில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) இடங்களில் ஏதேனும் ஒரு புதிய பாஸ்டேக்கை வாங்கலாம். அல்லது, NHAI உடன் கூட்டுள்ள, எந்தவொரு தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளிடமிருந்தும் ஒருவர் நேரடியாக ஒரு பாஸ்டேக்கைப் பெறலாம். தற்போது, இந்த பட்டியலில் சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎப்சி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை உள்ளன. Paytm மூலமும் FASTag ஐ வாங்கலாம். டோல் பிளாசாக்கள், இந்தியன் ஆயிலின் பெட்ரோல் பம்புகள், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், வங்கிகள், PAYTM மற்றும் amazon.in ஆகியவற்றிலும் பெறலாம்.
கட்டணங்கள்
பாஸ்டேக் வழங்குபவர், வங்கி அல்லது நிறுவனம், சார்பில், ஒரு முறை சேர கட்டணம் 200 ரூபாய் வசூலிக்கும். பாஸ்டேக் கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ஆகியவை வாகனத்தின் வகையைப் பொறுத்தது. வாகன உரிமையாளர்கள், இதுபற்றிய கட்டண விவரங்களை வழங்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
கேஷ் தள்ளுபடி
டோல் பிளாசாக்களில் பாஸ்டேக்கைப் பயன்படுத்துவதன் மூலம், டோல் தொகையில் 2.5 சதவீத கேஷ்பேக்கை அரசு வழங்குகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து வாகனங்களின் இடைவிடாத இயக்கத்தை ஃபாஸ்டாக் உறுதி செய்கிறது. பணத்தை எடுத்துச் செல்லத் தேவையில்லை என்பதால் பணம் செலுத்துவதில் எளிமை உள்ளது. வாகனங்களின் இடைவிடாத இயக்கத்தால், இது காற்று, மாசுபாட்டைக் குறைக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரசீதுகளை வழங்க டோல் பிளாசாக்கள் தேவையில்லை என்பதால், இது காகிதப் பயன்பாட்டையும் குறைக்கிறது.
இரண்டு வாகனங்களுக்கு ஒரு பாஸ்டேக்கைப் பயன்படுத்தலாமா?
இப்படி பயன்படுத்த முடியாது. பாஸ்டாக் என்பது வாகனம் சார்ந்ததாகும், அதாவது, ஒரு வாகனத்துடன் ஒட்டப்பட்டவுடன், அதை வேறு வாகனத்திற்கு மாற்ற முடியாது. நீங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கரை இழந்தால், உங்கள் பாஸ்டேக் பயன்பாட்டை மாற்ற அதை வழங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
FASTag ஐ வாங்க என்ன ஆவணங்கள் தேவை?
பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) பகுதியில், பாஸ்டேக் வாங்குகிறீர்கள் என்றால், பின்வரும் ஆவணங்களின் நகலுடன் ஒரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்காக இந்த ஆவணங்களின் அசல் நகலையும் கொண்டு செல்ல வேண்டும். வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி), வாகன உரிமையாளரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், KYC ஆவணங்கள் (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை). தனிப்பட்ட அல்லது வணிக பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்றால் மேற்கண்ட தேவைப்படும், ஆவணங்கள் வேறுபடலாம். உங்களிடம் தேவையான ஆவணங்கள் உள்ளதா என்பதை முதலிலேயே, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்வது எப்படி?
இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் உருவாக்கிய My FASTag ஆப்பை பயன்படுத்தி பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யலாம். வாடிக்கையாளர் அதை நிகர வங்கி, கிரெடிட் / டெபிட் கார்டு மற்றும் யுபிஐ மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.
பாஸ்டாக் வழங்கும் வங்கிகளின் பட்டியல்
- ஆக்சிஸ் வங்கி
- ஐசிஐசிஐ வங்கி
- ஐ.டி.எஃப்.சி வங்கி
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
- எச்.டி.எஃப்.சி வங்கி
- கருர் வைஸ்யா வங்கி
- ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி
- Paytm பேமென்ட் வங்கி
- கோட்டக் மஹிந்திரா வங்கி
- சிண்டிகேட் வங்கி
- பெடரல் வங்கி
- தென்னிந்திய வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி
- சரஸ்வத் வங்கி
- ஃபினோ பேமென்ட்ஸ் வங்கி
- சிட்டி யூனியன் வங்கி
- பாங்க் ஆஃப் பரோடா
- சிந்து வங்கி
- யெஸ் வங்கி
- யூனியன் வங்கி
- நாக்பூர் நகரிக் கூட்டுறவு வங்கி
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications