தங்கம் என்பது ஒரு பாதுகாப்பான முதலீடாக பல நூற்றாண்டுகளாக கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் போன்ற காலங்களில் தங்கத்தின் மதிப்பு உயரும். கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் 25,000 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதிலிருந்து 2020-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 50,000 என்ற இலக்கை எட்டியது.
ஆனால் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை 10 கிராமுக்கு 84,300 ரூபாயை எட்டியுள்ளது. எதிர்காலத்தில் தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை எட்டும் என்றும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலை ஏற்றத்தின் வரலாறு: 2011-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 10 கிராம் தங்கம் முதன்முதலாக 25,000 ரூபாயை எட்டியது. அதன் பிறகு 2020-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் ரூ.50,000-த்தை தாண்டியது. 2024-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் தங்கம் விலை ரூ.75,000-த்தை தொட்டது. இன்றைய நிலவரப்படி 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,430 ரூபாயாக உள்ளது.
25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயை அடைய 108 மாதங்கள் ஆனது. ஆனால் 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயை அடைய வெறும் 48 மாதங்களே ஆனது. இது தங்கத்தின் விலை எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். பொதுவாக டிரம்பின் வரி தொடர்பான கொள்கைகள் பணவீக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கும். இவற்றோடு தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மையும் சேர்த்து பார்க்கும் போது தங்கம் விலை ஏற்றம் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காம ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனரான கோலின் ஷா ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கை, பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களினால் தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. இதனால் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2025-தாம் ஆண்டுக்குள் தங்கம் விலை புதிய உச்சத்தை கண்டிப்பாக எட்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு நேர்மாறாக, இந்த ஆண்டு தங்கம் ரூ .1 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டுவது கடினம் என்று டாக்டர். சைனானி கூறுகிறார். தற்போதைய சந்தை நிலவரங்களின்படி, தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒருவேளை புவிசார் அரசியல் பதட்டங்கள், சுங்க வரியில் மாற்றம், உலக போர், இறக்குமதி வரியில் மாற்றம் போன்ற விஷயங்கள் நடந்தால் தங்கம் விலை 1 லட்சம் என்ற மைல்களை எட்டும் என்றும் கூறியுள்ளார்.
பொதுவாக தங்கத்தின் விலை அமெரிக்க டாலரில் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 2,858 டாலராக உள்ளது. ஒரு டாலருக்கு ரூ.87 என்று வைத்துக் கொண்டாலும் இந்திய மதிப்புக்கு 10 கிராம் தங்கத்தின் விலை 89,400 ரூபாயாகும்.
மெக்லாய் ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் CEO ஜமால் மெக்லாய், சந்தையில் எது வேண்டுமானாலும் சாத்தியம், தங்கம் 3000 டாலரை நெருங்கும் போது சந்தை பதட்டமாக இருக்கும். ஆனால், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்தால், தங்கம் 3000 டாலரைத் தாண்டி இன்னும் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications