இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு என மத்திய அரசு சார்பாக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட ஒரு முதலீட்டு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா. இதனை செல்வமகள் சேமிப்பு திட்டம் என அழைக்கிறோம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் நாம் செய்யக்கூடிய முதலீடுகளுக்கு அரசு தற்போது ஆண்டுதோறும் 8.2 % வட்டியை வழங்குகிறது.
நம் நாட்டில் அதிக அளவு வட்டி வருமானம் தரக்கூடிய ஒரு பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தி திட்டத்தின் கீழ் பெற்றோர் முதலீடு செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 11 வது ஆண்டாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் , நகரங்கள் என ஏராளமான பகுதிகளில் பெற்றோர் தங்களுடைய பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பணத்தை முதலீடு செய்வதை காண முடிகிறது.

10 வயது உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்களுடைய மகள்களின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாதித் தொகையை திரும்ப பெறலாம், அந்த குழந்தைக்கு 21 ஆண்டுகள் நிறைவடைந்த உடன் முழு தொகையும் திரும்பப் பெறலாம். படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் விதமாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை ஓர் நிதியாண்டில் நாம் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளை குறிப்பிட்டு பெற்றோர் வருமான வரி விலக்கும் பெற முடியும். ஒரு குழந்தை பிறந்த உடனேயே மாதந்தோறும் செய்யத் தொடங்கலாம். நாம் செய்யக்கூடிய முதலீட்டை பொறுத்து திட்டம் முதிர்வடையும் போது கிடைக்கும் பணம் அமையும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டியை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. முதன்முதலில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது 2015ஆம் ஆண்டில் 9.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. அதுவே பின்னர் 9.2 சதவீதம் என உயர்த்தப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அது குறைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் 8.2 % வட்டி வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி குறைந்ததால் , இதில் இணையும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா, மத்திய அரசிடம் இந்த திட்டத்தின் வட்டியை அதிகரிக்கும் முடிவு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கர் சவுத்ரி அளித்துள்ள பதிலில் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆண்டுதோறும் புதுப்புது இந்தியாவிலேயே அதிக அளவு வட்டி வருமானம் தரக்கூடிய ஒரு முதலீடு திட்டம் இது என கூறினார். இந்த திட்டத்தில் தற்போது 424.57 லட்சம் கணக்குகளும், 2.99 லட்சம் கோடி ரூபாய் முதலீடும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வட்டி குறைந்ததால் பயனாளிகள் குறையவில்லை மாறாக ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகள் அதிகரித்து வருகிறார்கள் முதலீடும் அதிகரித்து தான் வருகிறது. எனவே தற்போதைக்கு வட்டியை உயர்த்தும் முடிவு எதையும் அரசு எடுக்கவில்லை 8.2% வட்டி தொடர்ந்து வழங்கப்படும் இந்தியாவிலேயே இது அதிகபட்ச வட்டி தரும் ஒரு திட்டம் என பதில் அளித்துள்ளார்.எனவே தற்போதைக்கு அரசு செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டியை உயர்த்தப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. அதே வேளையில் மக்கள் தொடர்ந்து இதில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வட்டியை மேற்கொண்டு அரசு குறைக்காது என்றே சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications