ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர் பதற்றம், கத்தாரில் முடங்கிய எரிவாயு விநியோகம் என 2026ம் ஆண்டு உலக நாடுகளை இருளில் தள்ளி வருகிறது. குறிப்பாக, காஸ் விலையேற்றத்தால் இந்தியா மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகள் பெரும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த இக்கட்டான நேரத்தை பயன்படுத்தி கொண்டு, தனது காஸ் ஆலைகளிலிருந்து 40% அதிரடி தள்ளுபடி விலையில் எரிவாயுவை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது அமெரிக்கா பொருளாதார தடை செய்துள்ள நிறுவனத்தில் இருந்து, போலி ஆவணங்கள் மூலம் பெயரையே மாற்றித் தருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா கொடுத்துள்ள இந்த ஆஃபர், ஒருபுறம் இந்தியாவுக்கு ஜாக்பாட்டாக தெரிந்தாலும், மறுபுறம் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த தந்திரமான ஆஃபரை இந்தியா ஏற்குமா? அமெரிக்காவின் தடைக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? ரஷ்யாவின் இந்த 40% தள்ளுபடிக்கு பின்னால் இருக்கும் விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்.

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர், உலக நாடுகளின் அடுப்பங்கரையை அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு 2026ம் ஆண்டு உலகையே உலுக்கி வரும் எரிசக்தி தட்டுப்பாட்டை, தனக்கு சாதகமாக்கி கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு மாஸ்டர் பிளானை தீட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் பொருளாதார தடை விதிக்கப்பட்ட காஸ் ஆலைகளிலிருந்து, தெற்காசிய நாடுகளுக்கு மெகா ஆஃபர் ஒன்றை கொடுத்திருக்கிறது ரஷ்யா.

ஆசை காட்டும் ரஷ்யா?

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாலும், கத்தாரின் பிரம்மாண்ட எரிவாயு ஆலைகள் மீதான தாக்குதலாலும் உலகளவில் காஸ் விநியோகம் 20% முடங்கிப் போயிருக்கிறது. இதனால், சர்வதேச சந்தையில் எரிவாயு விலை பெரிய அளவில் எகிறியுள்ளது. குறிப்பாக, கத்தாரை மட்டுமே 60% நம்பியிருந்த வங்கதேசம் போன்ற நாடுகள், இப்போது கள்ளச் சந்தையில் இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்து காஸ் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உரத் தொழிற்சாலைகளுக்கான காஸ் விநியோகம் நிறுத்தப்பட்டு, விவசாயமும் கேள்விக்குறியாகியுள்ளது.

Also Read

இந்த இக்கட்டான சூழலை தான் ரஷ்யா சரியாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது. அமெரிக்கா தடை விதித்த எங்கள் ஆலைகளிலிருந்து காஸ் வாங்கி கொள்கிறீர்களா? சந்தை விலையை விட 40% தள்ளுபடி தருகிறோம் என ஆசை காட்டியிருக்கிறது ரஷ்யா.

ரஷ்யாவின் தந்திரம்!

சீனா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த சில பெயரே தெரியாத இடைத்தரகர்கள் மூலமாக இந்த டீல் பேசப்பட்டு வருவதாகவும், நீங்கள் எங்களிடம் காஸ் வாங்குவது அமெரிக்காவுக்கு தெரியாது. இது ஓமன் அல்லது நைஜீரியாவிலிருந்து வந்த காஸ் என்று நம்பவைக்கும் வகையில் ஆவணங்களை தருகிறோம் என அந்த இடைத்தரகர்கள் ரகசிய வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறப்படுகிறது. அதாவது தடை செய்யப்பட்ட ரஷ்ய காஸுக்கு பெயர் மாற்றம் செய்து விற்க துணிந்துவிட்டது ரஷ்யா.

இந்தியா எடுக்கும் முடிவு என்ன?

இந்தியா எப்போதும் தடை செய்யப்பட்ட நாடுகளுடன் வர்த்தகம் செய்வதில் நிதானத்தையே கடைபிடிக்கும். கடந்த மாதம் அமெரிக்கா அளித்த சில சலுகைகளால், ஈரானிடம் இருந்து 2019-க்கு பிறகு இந்தியா கச்சா எண்ணெயை வாங்கியது. ஆனால் ரஷ்யாவின் ஆர்க்டிக் எல்.என்.ஜி 2 (Arctic LNG 2) போன்ற கறுப்பு பட்டியலில் உள்ள திட்டங்களில் இருந்து காஸ் வாங்க இந்தியா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

தற்போது சீனா மட்டுமே ரஷ்யாவின் இந்த நிழல் கப்பற்படை மூலமாக ரகசியமாக காஸ் இறக்குமதி செய்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக மற்ற நாடுகளையும் தனது வாடிக்கையாளர் ஆக்கிக்கொண்டால், அமெரிக்காவின் பொருளாதார தடைகளை தவிடுபொடியாக்கி விடலாம் என்பது புதினின் கணக்கு.

தர்மசங்கடத்தில் தெற்காசியா!

ஒருபுறம் மலிவு விலை எரிவாயு, மறுபுறம் அமெரிக்காவின் கோபம். இரண்டிற்கும் நடுவில் இந்தியா மற்றும் வங்கதேசம் சிக்கியுள்ளன. உரம் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவின் இந்த 40% டிஸ்கவுண்ட் ஆஃபர் வரப்பிரசாதம் தான். ஆனால், அமெரிக்காவின் வாட்ச் டாக் பார்வையில் இருந்து தப்பிப்பது அத்தனை சுலபமல்ல.

எரிசக்தி பற்றாக் குறையிலிருந்து தப்பிக்க இந்த நிழல் உலக வர்த்தகத்தை இந்தியா நாடுமா அல்லது கொள்கை ரீதியாக தவிர்த்துவிட்டு அதிக விலை கொடுத்து உலக சந்தையில் வாங்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+