சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்குமா.. உலகின் தொழிற்சாலையாகுமா.. கேட்கவே நல்லாருக்கே..!

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக மாடல் ஆன ஐபோன் 14 உற்பத்தியில் கணிசமான பங்கு இந்தியாவின் உற்பத்தி ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இது சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் என்றாலும், இந்தியாவிலும் பகுதி உற்பத்தி செய்யப்படுவது, சீனாவுக்கு மாற்றாக உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளன எனலாம்.

ஒரு புறம் இந்தியாவின் மிகபெரிய சந்தையை நோக்கி சர்வதேச நிறுவனங்கள், ஆர்வம் காட்டி வந்தாலும், மறுபுறம் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பற்பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மேற்கொண்டு சர்வதேச நிறுவனங்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி

ஐபோன் 14 மாடலின் உற்பத்தியில் வெறும் 5% மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இது பெரியளவில் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமீபத்திய ஜேபி மார்கன் அறிக்கை ஒன்றில் ஐபோன்கள் உற்பத்தியானது இந்தியாவில், 2025-க்குள் கால்வாசி இங்கேயே தயாரிக்கப்படலாம் என கணித்துள்ளது.

சீனா - அமெரிக்கா மோதல் போக்கு

சீனா - அமெரிக்கா மோதல் போக்கு

கடந்த 2017ம் ஆண்டு முதல் ஐபோன் இந்தியாவின் தனது உற்பத்தியினை செய்து வருகின்றது. எனினும் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வணிக பதற்றமானது, இவ்விரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தாய்வான் மற்றும் சீனாவுக்கு இடையேயான பிரச்சனைக்கு பிறகு, சீனா அமெரிக்காவுக்கு பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தது.

ஜீரோ கோவிட் பாலிசி

ஜீரோ கோவிட் பாலிசி

இது மட்டும் அல்ல, சீனாவின் போடப்பட்ட ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக சீனாவின், உற்பத்தியானது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. முன்னதாக கால நிலை காரணமாக மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, கடுமையான மின் வெட்டும் இருந்தது. இதன் காரணமாக சீனாவில் இருந்து பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் வெளியேறத் தொடங்கியுள்ளன.

ஊக்க சலுகையும் இல்லை

ஊக்க சலுகையும் இல்லை

இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இருந்து தான் சீனாவில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. மேலும் சீனாவின் கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு சலுகைகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரையில் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இனி கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தியாவின் சலுகை திட்டங்கள்

இந்தியாவின் சலுகை திட்டங்கள்

இதற்கிடையில் இந்திய அரசு உற்பத்தி துறையினை ஊக்குவிக்கும் விதமாக பற்பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது. நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றது. குறிப்பாக பிஎல்ஐ திட்டத்தின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகின்றது. ஏற்கனவே சிப் உற்பத்தி, பேட்டரி உற்பத்தி, மின் சாதன உற்பத்தி என இந்தியாவுக்கு தேவையான அனைத்தினையும் இங்கேயே உற்பத்தி செய்ய முதலீடுகளை ஈர்க்க தொடங்கியுள்ளது. பல ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. இது மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் மட்டும் போதாது?

ஆப்பிள் மட்டும் போதாது?

அரசின் இந்த திட்டங்களினால் நிச்சயம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு தேவையான பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படலாம். இதனால் இறக்குமதியானது குறையும். ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

எனினும் நிபுணர்கள் தரப்பில் ஆப்பிள் ஒன்றே இந்தியாவின் உற்பத்தியினை மேம்படுத்தி விடாது. இந்தியாவின் முக்கிய அம்சமாக இருக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் பிரச்சனையிலேயே உள்ளன. ஆக அவற்றையும் ஊக்குவிக்க வேண்டும். இது தான் இந்தியா பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் ஒன்றாக இருக்கும்.

MSME-களை ஊக்குவிக்கணும்

MSME-களை ஊக்குவிக்கணும்

இன்றைய காலகட்டத்தில் பெரு நிறுவனங்களை காட்டிலும் அதிகளவில் வேலை வாய்ப்புகளை கொடுப்பது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான். ஆக அத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தும்போது, நிச்சயம் பெரியளவிலான மாற்றத்தினை காணும். அது இந்தியாவின் நிரந்தர வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+