அலாஸ்கா: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா உடனான அனைத்து வணிக தொடர்புகளையும் நிறுத்தி வைத்துவிட்டன.
இந்த சூழலில் தான் ரஷ்யா இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்துதான் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவின் இருக்கின்றன.

இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் ரஷ்யாவின் பொருளாதார நிலைத்து நிற்கிறது இதுதான் அந்த நாடு தொடர்ந்து உக்ரைன் போரில் தீவிரமாக இயங்குவதற்கு உதவுகிறது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்த சூழலில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதல் கட்டமாக 25% வரியை விதித்த டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி மேலும் 25 சதவீத வரியை விதித்தார்.
வரும் 27ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி என்பது அமலுக்கு வருகிறது. டிரம்பின் இந்த அறிவிப்பு மத்திய அரசையும் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த தொழில்களையும் பெருமளவில் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது . இந்த சூழலில் உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
புதின் உடனான சந்திப்பை அடுத்து ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள டிரம்ப்பிடம் உக்ரைன் போர் முடிவுக்கு வரவில்லை என்றால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தீர்களே அந்த நிலைப்பாடு மாறி இருக்கிறதா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள டிரம்ப் இந்த விவகாரத்தில் தற்போதைக்கு எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை ஆனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவு எடுப்பேன் என தெரிவித்திருக்கிறார். இப்போதைக்கு இந்த விஷயத்தை பற்றி நான் எதுவும் சிந்திக்கவில்லை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இதைப் பற்றி நான் யோசிக்கிறேன் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நன்றாக சென்றது என தெரிவித்திருக்கிறார் .
எனவே தற்போதைக்கு சீனாவுக்கு எந்த கூடுதல் வரியும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது, ஆனால் இந்தியா மீது என்ன முடிவெடுப்பார் என்பது பேச்சுவார்த்தையின் போக்கை பொறுத்து மாறும் என சொல்லலாம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியா மீது நாங்கள் வரி விதித்ததால் ரஷ்யா தன்னுடைய பெரிய வாடிக்கையாளரை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தினால் தான் இந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்தது என டிரம்ப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
முதலில் இந்தியாவை இழந்து விடுவோம் அதை தொடர்ந்து சீனாவையும் இழந்து விடுவோம் என்ற அச்சம் ரஷ்யாவிடம் ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே டிரம்பின் மிரட்டல் ஒரு புறம் இருந்தாலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இதுவரை குறைக்கவில்லை. ஆகஸ்ட் மாத நிலவரப்படி ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது .
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications