ஐடி ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்.. இதோ சூப்பர் அப்டேட்!

இந்திய ஐடி நிறுவன பங்குகள் சர்வதேச அளவில் நிலவி வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில், கடந்த 2022ம் ஆண்டில் சரிவினைக் கண்டன.

பொருளாதார மந்த நிலையின் மத்தியில் நடப்பு ஆண்டிலும் சரிவு தொடரலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் குறித்தான கணிப்புகளானது குறைத்து மதிப்பிடப்பட்டும் வருகின்றது.

அமெரிக்கா மட்டும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ஐடி துறையின் வளர்ச்சியானது மெதுவானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி குறையலாம்

வளர்ச்சி குறையலாம்

தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ஐடி நிறுவனங்களின் முதலீடும் சரிவினைக் கண்டுள்ளது. ஆக மீண்டும் ஒரு காலாண்டில் ஐடி நிறுவனங்கள் சரிவினையே காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்களின் வருவாய் குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் லார்ஜ் கேப் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி 0.4% முதல் 2.6% வரையில் வளர்ச்சி காணலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் மார்ஜினில் தாக்கம் இருக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

ஹெச் சி எல் டெக்னாலஜி

ஹெச் சி எல் டெக்னாலஜி


சமீபத்தில் ஹெச்.சி. எல் டெக்னாலஜி நிறுவனம் அதன் வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பினை கீழ் நோக்கி மாற்றியமைத்தது. இதே அசெஞ்சர் நிறுவனம் அதன் வளர்ச்சி விகிதத்தினை கீழ் நோக்கி திருத்தம் செய்தது. தொடர்ந்து தேவையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், தேவையின் போக்கு எப்படியிருக்கிறது, அட்ரிஷன் விகிதம் என பலவும் கவனிக்கப்பட்டு வருகின்றது.

தேவை சரியலாம்

தேவை சரியலாம்

2022ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2021ம் நிதியாண்டில் மிக வலுவான வளர்ச்சியினை ஐடி நிறுவனங்கள் கண்டிருந்தன. இது தொடர்ந்து தொற்று நோயானது அதிகரித்து வரும் சூழலில், பணவீக்கமும் உச்சத்தில் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தேவையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக மூன்றாவது காலாண்டில் அழுத்தம் இருக்கலாம் என ஜெஃபரீஸ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மார்ஜினில் தாக்கம்

மார்ஜினில் தாக்கம்

எப்படியிருப்பினும் அடுத்து வரவிருக்கும் மூன்றாவது காலாண்டில் இந்த போக்கானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஹெச்.சி.எல்.டெக்னாலஜி, டிசிஎஸ், கோபோர்ஜ் நிறுவனங்களின் மார்ஜின் விகிதமானது 50 அடிப்படை புள்ளிகள் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் மார்ஜின் விரிவாக்கமானது மேற்கொண்டு வளர்ச்சியினை தூண்டலாம். இதே டிசிஎஸ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதமும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ஜின் அழுத்தம்

மார்ஜின் அழுத்தம்

இதே தொடர்ந்து கோபோர்ஜ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதமானது ஆப்சோரிங் விகிதம், பயன்பாட்டு விகிதம், அன்னிய செலாவணி என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என ஜெஃபரீஸ் கணித்துள்ளது.

மேற்கண்ட நிறுவனங்கள் தவிர மற்ற ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகித கணிப்புகளானது வலுவாக காணப்படுகின்றது. எனினும் கடந்த டிசம்பர் காலாண்டில் அவற்றின் வளர்ச்சி விகிதமானது சரிவில் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

டிஜிட்டல் மற்றும் கிளவுட் தேவையானது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வலுவாக காணப்படுகின்றது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது குறைந்தபட்சம் இந்த காலாண்டில் ஆவது இப்படியே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் மெதுவான வளர்ச்சி விகிதமே காணப்படுகின்றது. சில்லறை துறை மற்றும் வங்கி அல்லாத நிதித் துறையில் வளர்ச்சி வலுவாக காணப்படுகின்றது. ஆக வளர்ச்சி விகிதமானது 0.5% - 4% ஆக வளர்ச்சி விகிதமானது இருக்கலாம் என கணித்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புகள்

மொத்தத்தில் ஐடி துறையில் வளர்ச்சி விகிதமானது மீண்டும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும் முடிவடைந்த காலாண்டில் வளர்ச்சி குறைந்தே காணப்படலாம். இது ஐடி பங்குகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதே ஐடி துறை வேலை வாய்ப்புகளை பொறுத்தவரையில் இனி படிப்படியாக மீண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+