திருச்சி: அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட ஜாபில் நிறுவனம் திருச்சியில் அமைக்க இருக்கும் உற்பத்தி ஆலை அந்த மாவட்டத்தின் அடையாளத்தையே மாற்றும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கே செயல்படும் ஜாபில் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இதன்படி ஜாபில் நிறுவனம் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. இது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். திருச்சியை பொறுத்தவரை எரிசக்தி துறை சார்ந்த உபகரணங்களின் உற்பத்திக்கு பெயர் போனது. ஆனால் இந்த துறை மந்த நிலையை சந்தித்ததால் அங்கே தொழில் வளர்ச்சியும் சரிந்தது.

திருச்சியை பொருத்தவரை அங்கே பெரும்பாலான அரசு சார்ந்த நிறுவனங்களே இருக்கின்றன. பெல், வீல்டிங் ஆய்வு நிறுவனம், பொன்மலை ரயில்வே பணிமனை உள்ளிட்டவற்றை உதாரணமாக கூறலாம். ஆனால் தற்போது வளர்ச்சியில் இருக்கும் மின்னணு சாதனங்கள் சார்ந்த நிறுவனங்கள் அங்கே கிடையாது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான ஜாபில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் 2000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஆலையை நிறுவ உள்ளது.
இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது அந்த பகுதியில் சுமார் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்த ஜாபில் நிறுவனம்தான் ஆப்பிள், ஹெச்பி மற்றும் சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையான மின்னணு சாதன பொருட்களை ஒருங்கிணைத்து விநியோகம் செய்கிறது. அதாவது ஸ்மார்ட்போன்கள் தவிர பிற மின்னணு சாதனங்களை இந்த நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் தயாரித்து வழங்குகிறது.
ஜாபில் நிறுவனம் தன்னுடைய முதலீட்டுக்காக திருச்சி மாவட்டத்தை தேர்வு செய்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி என்றால் அது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூர் தான் என்ற நிலை மாறி தற்போது திருச்சியும் அதில் இடம் பிடித்துள்ளது. இதற்கு திருச்சியிலும் தற்போது இந்த துறை சார்ந்த திறமையான பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
திருச்சியில் தற்போது 25 ஐடிஐ கள் செயல்படுகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் துறையில் ஆண்டுதோறும் 6516 பேர் தேர்ச்சி பெற்று வேலை தேடி வெளியே வருகின்றனர்.
குறிப்பாக புல்லபாடி அரசு ஐடிஐ நிறுவனத்தில் மின்னணு துறை சார்ந்த மெக்கானிக் பாடங்களை முடித்து ஆண்டுதோறும் 1388 மாணவிகள் வேலை தேடி வெளியே வருகின்றனர். தற்போது ஜாபில் நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்தால் இவர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. இவை தவிர திருச்சி மாவட்டத்தினை பொருத்தவரை 23 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 35 பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. எனவே திறமையான பணியாளர்கள் இங்கேயும் கிடைக்கின்றனர் என தொழில் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜாபில் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனம் திருச்சி மாவட்டத்தில் அமைவதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் பேலன்ஸ் செய்யப்பட்டுள்ளது என தொழில்துறை செயலாளரான அருண்ராய் தெரிவிக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என வரும் நிறுவனங்களிடம் ஏற்கனவே தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்த இடங்களை தவிர்த்து பிற இடங்களையும் பரிந்துரை செய்வதாக அவர் கூறுகிறார்.
அமெரிக்க நிறுவனம் திருச்சியில் தற்போது செய்துள்ள இந்த முதலீட்டின் மூலம் பல்வேறு நிறுவனங்களும் திருச்சியை நோக்கி வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்த துறை சார்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மற்ற மாவட்டங்களுடன் எளிதாக சாலை போக்குவரத்து இணைப்பு கொண்ட ஒரு மாவட்டமாக திருச்சி இருக்கிறது. சிறந்த ரயில்வே நெட்வொர்க்கையும் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பிஸியான விமான நிலையத்தையும் கொண்டிருக்கிறது. எனவே இங்கே பொருட்களை தயாரித்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது எளிமையாக இருக்கும் என இங்கே இயங்கும் தொழில் துறையினர் கூறுகின்றனர்.
Written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications