பெரும் சிக்கலில் டாடா குழுமம்.. டாடா சன்ஸ் என்.சந்திரேசேகரன் வெளியேற முடிவு..?

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு அவரது சகோதரர் நோயல் டாடா உயர்மட்ட நிர்வாகத்தை கைப்பற்றிய நாளில் இருந்து தொடர்ந்து பிரச்சனைகள் வெடித்து வருகிறது.

இதன் நீட்சியாக டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ்-ன் சேர்மன் என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு குறித்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

பெரும் சிக்கலில் டாடா குழுமம்.. டாடா சன்ஸ் என்.சந்திரேசேகரன் வெளியேற முடிவு..?

என்.சந்திரசேகரனின் சேர்மன் பதவி பிப்ரவரி 2027 வரையில் இருந்தாலும் அடுத்த ஒரு வாரத்தில் நடக்க இருக்கும் டாடா குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் மீண்டும் அவர் டைரக்டராக நியமிக்கப்பட்டால் மட்டுமே சேர்மன் பதவியில அடுத்த ஒரு வருடமாவது நீடிக்க முடியும். இல்லையெனில் உடனடியாக இப்பதவியில் இருந்து விலக வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் தான் சந்திரசேகரன் தனது நெருங்கிய வட்டத்தில் இருக்கும் நபர்களிடம் AGM கூட்டத்தின் முடிவுகளுக்காக காத்திருப்பதை காட்டிலும் பதவி விலகலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read

ஒருபக்கம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் கூட்டம் நடக்குமா என்பது பெரும் கேள்வியாக இருக்கும் வேளையில், கூட்டம் நடந்தாலும் சந்திரசேகரன் டைரக்டராக நியமிக்கப்பட்டு மீண்டும் தனது பதவி காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் டாடா சன்ஸ் AGM கூட்டத்தில் நோயல் டாடா அடுக்கடுக்காக பல கேள்விகளை வைத்துள்ளார். அப்படி இதற்கான பதில்களை சந்திசேகரன் கொடுத்தாலும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்துக்கொண்டு அதிகாரம் செய்யும் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இருக்கும் நோயல் டாடா சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

Recommended For You

இதனால் டாடா டிரஸ்ட், டாடா சன்ஸ் நிர்வாக குழுக்கள் எப்படி வாக்கு அளிக்கும் என்பதில் பெரும் குழப்பமும், நிலையற்ற தன்மையும் உள்ளது. இந்த வாக்கு அளிக்கும் அதிகாரத்தில் Sir Ratan Tata Trust அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் இருக்கிறது, ஆனால் இந்த டிரஸ்ட் விதிகளை மீறி செயல்பட்ட காரணத்தால் மகாராஷ்டிரா சேரிட்டி கமிஷனர் இந்த அமைப்பு எவ்விதமான முடிவுகளை எடுக்க கூடாது என உத்தரவிட்டு உள்ளது.

இப்படி சந்திரசேகரனுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் ஆகஸ்ட் 18ஆம் தேதி கூட்டம் நடப்பதற்கு முன்பே இப்பதவியில் இருந்து வெளியேறுவதற்கான முடிவை ஆய்வு செய்து வருகிறார்.

இதேபோல் ஆகஸ்ட் 18 கூட்டம் சந்திரசேகரனுக்கு எதிராக அமைந்தால் உடனே டாடா சன்ஸ் சேர்மன் பதவியை விட்டு விலக வேண்டி வரும், இந்து டாடா குழுமத்தின் இயக்கத்திற்கும், வர்த்தக முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆகஸ்ட் 18 இந்திய வர்த்தக சந்தைக்கும், 10 லட்சத்திற்கும் அதிகமான டாடா குழும ஊழியர்களின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமான நாளாக இருக்கபோகிறது. தற்போது இக்கூட்டம் நடக்காவிட்டால் 6மாதம் ஒத்திவைக்க சட்டத்தில் இடம் உண்டு, ஆனால் சேர்மன் ஆக சந்திரசேகரன் தொடர் டைரக்டராக நியமிக்க வேண்டும். இந்த நியமனத்தை இடைக்காலமாக Registrar of Companies மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் Articles of Association (AoA) அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+