ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எக்ஸிம் வங்கி என பல பொதுத்துறை வங்கிகளிடம் அதானி குழுமம் காப்பர் திட்டத்திற்காக கடன் வாங்கியது.
தற்போது இந்த வங்கிகள் கடன் மதிப்பீட்டில் கூடுதல் ஆபத்தினை எதிர்கொள்கின்றன.
இதில் எஸ்பிஐ 1846 கோடி ரூபாய், பாங்க் ஆப் பரோடாவில் 1750 கோடி ரூபாயும், கனரா வங்கி 1000 கோடி ரூபாயும், ஆகிய மூன்று வங்கிகளிலும் 75% அதிகமான கடன் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த கிரீன் பீல்டு காப்பர் திட்டத்தில் தனியார் அல்லது வெளி நாட்டு வங்கிகள் எதுவும் இல்லை.
தொடர்ந்து கடன் வழங்க திட்டம்
பாங்க் ஆப் பரோடாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி சஞ்சீவ் சாதா, முன்னதாக சில தினங்களுக்கு முன்பு அதானி குழுமம் வங்கிக்கு தேவையான தர நிலைகளை பூர்த்தி செய்தால், தொடர்ந்து ஆதரவளிக்கும். தொடர்ந்து கடன் வழங்கலாம் எனும் விதமாக கூறியிருந்தார். மேலும் பங்கு சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கம் பற்றி கவலையில்லை என கூறியிருந்தார்.
பெரும் கவலை
இது குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது எனலாம். எனினும் அதானி குழுமம் மும்பை தாராவி பகுதியினை மேம்படுத்துவதற்கான திட்டம் அதானி குழுமத்திற்கு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு 50.7 பில்லியன் ரூபாய் என கூறப்படுகின்றது. இந்த திட்டத்தினை மையமாக வைத்தே அதானி குழுமத்திற்கு கூடுதல் கடன்கள் வழங்கவும் பாங்க் ஆப் பரோடா ஒப்புதல் அளித்தது.
அதிக வட்டிக்கு வாய்ப்பு
எனினும் இந்த கடன் ஒப்பந்தத்தில் அதிக வட்டி விகிதத்தினை தூண்டும் உட்பிரிவுகளும் உள்ளன. இந்த கடனிற்கு அதிக வட்டி இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
ஆக அதானி குழுமத்தின் மீதான மதிப்பீடு குறையும்பட்சத்தில் அதிக வட்டி விகிதங்கள் விதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம்.
கட்ச் காப்பர் லிமிடெட்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனமான கட்ச் காப்பர் லிமிடெட் நிறுவனம் 5 லட்சம் டன் சுத்திகரிப்பட்ட காப்பர் உற்பத்திற்காக அமையவிருக்கும் ஆலையாகும். இது காப்பர், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் உற்பத்தி செய்யும் திட்டங்களை கொண்டது.
திட்டம் முழுமையாக நிறைவேறுமா?
இந்த திட்டம் இதுவரையில் ஒப்பந்த அளவில் செயல்முறையில் உள்ள நிலையில், அது இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இது சரியாக முடிவுக்கு வரும் பட்சத்தில், அடுத்த 5 - 6 ஆண்டுகளில் மிகப்பெரிய காப்பர் உருக்கும் ஆலையாக உருவெடுக்கும். தற்போது அதானி குழுமத்தில் நிலவி வரும் பதற்றம் என்பது மேற்கொண்டு, இந்த திட்டங்களில் பாதிப்பினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.
வங்கிகள் மீண்டும் வழங்குமா?
அதானி குழுமத்தின் இந்த திட்டம் முழுமையாக நிறைவேறும் பட்சத்தில் இன்னும் 5 - 6 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய காப்பர் சுத்திகரிப்பு ஆலையாக கட்ச் ஆலை இருக்கலாம். இது நீண்டகால நோக்கில் அதானி குழுமத்திற்கு பயனுள்ளதாகவும், அதன் வளர்ச்சியினை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும் ஏற்கனவே 6071 கோடி ரூபாய் தொகையினை விடுவித்த நிலையில், மிச்சமிருக்கும் தொகையை வங்கிகள் வழங்குமா? மீதமிருக்கும் தொகையை வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே.


Click it and Unblock the Notifications