இந்திய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது, ஒருபக்கம் ஜூன் 1 ஆம் தேதி நடக்கும் 7ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்கும் வேளையில், அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் கட்சிகள் யாரை நிதியமைச்சராக நியமிக்கப்போகிறது என்ற கேள்வி மிக முக்கியமானதாக உள்ளது.
இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி போக்கில் பிரதமருக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது நிதியமைச்சருக்குத் தான். அந்த வகையில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக எஸ் ஜெய்சங்கர் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.

தற்போதைய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தும் அவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்திகளுக்கு பிஜேபி தரப்பில் இருந்தோ, நிர்மலா சீதாராமன் அவர்களோ விளக்கம் கொடுக்கவில்லை. இதை வதந்தியா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
இதேபோல் காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி வெற்றிபெற்றால் ரகுராம் ராஜன் நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் இது பொய் எனத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே ரகுராம் ராஜன் அறிவித்துவிட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், ராகுல் காந்தி உடன் நெருங்கிப் பயணிக்கும் வேளையில், அவர் அரசியலுக்கு வருவார் என அதிகப்படியான ஊகங்கள், அறிவிப்புகள் எழுந்துள்ளன. ஆனால் ரகுராம் ராஜன் இதுபோன்ற வதந்திகளை மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் வீர் சங்விக்கு, ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில், "நான் பலமுறை கூறியும் மக்கள் இன்னும் என்னை நம்பவில்லை. நான் ஒரு கல்வியாளர். குழந்தைகளை முத்தமிடுவது எனது தொழில் அல்ல." தெரிவித்தார்.
குழந்தைகளை முத்தமிடுவது என்பது அமெரிக்காவில், அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்பாகவும் அக்கறையுடனும் இருப்பதைக் காட்டுவதற்கு ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் குழந்தைகளுக்கு முத்தமிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இதை உவமையாகக் கொண்டு ரகுராம் ராஜன் நான் அரசியல்வாதியில்லை என்றும், அரசியலுக்குத் தான் வர விரும்பவில்லை என்பதையும் இந்த பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன் மேலும் இந்த பேட்டியில் பேசுகையில் "எனக்கு ஒரு குடும்பமும் மனைவியும் உள்ளனர், நான் அரசியலுக்கு வருவதை அவர்களும் விரும்பவில்லை. எனவே அரசியலில் நுழைவதை விட, என்னால் முடிந்தவரை வழிகாட்டுவதற்கு விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
அதைச் செய்யவே நான் முயற்சிக்கிறேன். அரசாங்கக் கொள்கைகள் எப்போதெல்லாம் தடம் புரண்டு ஓடுகிறதோ அப்போது நான் அதைப் பற்றிப் பேசுகிறேன். இதில் நான் அரசியல்வாதியா அல்லது அரசு அதிகாரியா என்பதைப் பார்ப்பதில்லை என ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
ரகுராம் ராஜன் 2022 இல் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் இணைந்தார். ரகுராம் ராஜன் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடந்து சென்ற பின்பு தான் அவர் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுக்கள் அதிகமாக வெளியானது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications