இந்தியாவில் அக்டோபர் மாதம் சில்லறை பணவீக்கம் (CPI) 3 மாதங்களில் குறைந்தபட்சமாக 6.7 சதவீதமாகவும், மொத்த விற்பனை பணவீக்கம் (WPI) கடந்த 19 மாதங்களில் குறைந்தபட்சமாக 8.39 சதவீதமாக இருந்தது.
இது நவம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை விடவும் சர்வதேச பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், ஆர்பிஐ முடிவு நடுத்தர மக்களுக்கும், மாத சம்பளக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வின் மூலம் வீட்டுக் கடன், தனிநபர் கடன், தங்க நகை கடன் வரையில் அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் உயரும். இத்தகைய வட்டி விகித உயர்வு நடுத்தர மக்களையும், மாத சம்பளக்காரர்களையும் அதிகம் பாதிக்கும்.
சக்திகாந்த தாஸ்
இந்திய ரிசர்வ் வங்கி-யின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை கூட்டம் கடைசியாகச் செப்டம்பர் 30ஆம் தேதி நடந்தது கூட்டத்தில் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி வகிதமான ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.
4 முறை வட்டி உயர்வு
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ 2022 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் சுமார் 4 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் ஏற்கனவே 1.9 சதவிகிதம் அதிகரித்து 3 ஆண்டுகளில் அதிகபட்சமாகத் தனது ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
டிசம்பர் கூட்டம்
இந்த நிலையில் தான் டிசம்பர் மாதம் 5-7 ஆகிய தேதிகளில் ஆர்பிஐ தனது நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் ஆர்பிஐ எடுக்கப்போகும் முடிவு மிகவும் முக்கியமானது, ஏற்கனவே பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ரெசிஷனில் மாட்டிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த முடிவு முக்கியமானதாக விளங்கும்.
பணவீக்க டார்கெட்
இந்தியாவில் இன்னும் பணவீக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி-யின் டார்கெட் அளவான 6 சதவீதத்திற்குக் கீழ் கொண்டு வராத நிலையில் நாணய கொள்கையைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் கடந்த 10 மாதங்களாக ஆர்பிஐ இலக்கை தாண்டி தான் உள்ளது.
190 புள்ளிகள் வட்டி விகித உயர்வு
மே மாதம் முதல் 190 புள்ளிகள் வட்டி விகிதத்தை 4 முறையில் உயர்த்திய நிலையிலும், ரெசிஷன் அச்சம் உலகம் முழுவதும் அதிகமாக இருக்கும் நிலையில் டிசம்பர் மாத கூட்டத்தில் கட்டாயம் வட்டி விகித உயர்வு இருக்கும். இல்லையெனில் 2023 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் நடக்கும் கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படும்.
பெஞ்ச்மார்க் வட்டி விகிதம்
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் சராசரியாக 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், மார்ச் 2023க்குள் RBI இன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதம் 6.25 சதவீதமாக ஆக உயரும் என்றும் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் அமைப்பு கணித்துள்ளது. இதன் மூலம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா நிலைப்பாடு
இதே வேளையில் அமெரிக்கா தனது வட்டி விகித உயர்வின் வேகத்தைக் குறைத்துள்ளதாகச் சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தின் மூலம் டிசம்பர் மாதம் ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்துவது சந்தேகம் தான், ஆனால் 2022-23 ஆம் நிதியாண்டுக்குள் கட்டாயம் ஒரு முறை உயர்த்திய வேண்டிய கட்டாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications