இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் டிசம்பர் மூன்றாம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் அனைத்தையும் டிசம்பர் 5ஆம் தேதி அன்று அதாவது நாளை காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்.
ஆர்பிஐ நாணய கொள்கை குழு கூட்டம் என்றாலே நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அறிவிப்பு ரெப்போ வட்டி விகிதத்தில் ஆர்பிஐ என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என்பதுதான். அமெரிக்க மத்திய வங்கி இந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்ற தகவல் மிக வலுவாக உலகம் முழுவதும் பரவி வருகிறது .

எனவே இந்திய ரிசர்வ் வங்கியும் அதேபோன்ற ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்கலாம் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இரண்டு நாட்கள் கூட்டத்தில் நிச்சயமாக மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் , பணவீக்க போக்கு ,பொருளாதார வளர்ச்சிக்கான சூழல் எப்படி இருக்கிறது , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் ரெப்போ வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையுமே ஆய்வு செய்திருப்பார்கள் .
இந்த இரண்டு நாட்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ந்திருக்கிறது 90 ரூபாயை கடந்து விட்டது .ஆனால் இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது பணவீக்கம் வரலாற்றில் இல்லாத சரிவை சந்தித்திருக்கிறது. இப்படி வட்டி குறைப்புக்கு சாதகமான மற்றும் பாதகமான என இரண்டுக்குமான நிகழ்வுகளுமே உள்ளன.
ஒருபுறம் அமெரிக்க அரசாங்கத்தின் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரிவிதிப்பு குறைக்கப்பட வில்லை, வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இது அந்நிய செலாவணி இருப்பு, இறக்குமதி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். டாலரின் நாம் செய்ய கூடிய வர்த்தகம் அனைத்துமே இதன் வலியை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி குறைப்பு அறிவிக்கும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர், இருக்காது என்றும் ஒரு தரப்பினர் கணிக்கின்றனர் . எது எப்படியோ நாளை காலை 10 மணிக்கு அந்த விவரம் தெரிய வந்துவிடும் . இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 100 அடிப்படை புள்ளிகள் அதாவது 1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துவிட்டது.
இது நம்முடைய வீட்டுக் கடன் ,வாகன கடன் ,நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களிலும் எதிரொலித்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் கடன் சுமை குறிப்பாக வட்டி சுமை பெருமளவில் குறைந்திருக்கிறது. எனவே மேற்கொண்டு வட்டி குறைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்பது கடன் வாங்கியவர்களின் எதிர்பார்ப்பு இருந்தாலும் . ரிசர்வ் வங்கி பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு தான் அந்த முடிவை எடுக்கும் என்பதால் இந்த நிதிக் கொள்கை குழு கூட்டம் பலராலும் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications