இந்தியாவின் பொருளாதாரம் உறுதியாகவும், தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று வெளியிடும் 2நாள் நாணய கொள்கை முடிவுகளில் தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் வைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் மேசமான நிலையை எட்டியிருக்கும் அவசரக்கால அடிப்படையில் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என பேச்சுக்கள் அடிப்பட்டு வரும் வேளையில் ஆர்பிஐ நிலைப்பாடு என்னவாக இருக்கும்.
அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் வட்டி குறைப்பைத் தாண்டி, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அடுத்த மூன்று மாதங்களில் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசு பத்திரங்களைச் சந்தையிலிருந்து திரும்ப வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. இத்தகைய முக்கியமான தருணத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் நடக்கிறது.

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கவைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 9வது முறையாக நிலை நிறுத்த உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவை விட இந்தியாவுக்கு அதிக பொருளாதாரம் மற்றும் பணவீக்க நெருக்கடி இல்லாததே ஆகும்.
தற்போது, முதலீட்டுச் சந்தை நிபுணர்கள் அமெரிக்காவில் அவசர வட்டி விகிதக் குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், பணவீக்கம் மற்றும் வேலையின்மை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ள போதிலும், பெடரல் ரிசர்வ் தேவையில்லாமல் நீண்ட காலமாக வட்டி விகிதத்தைக் குறைப்பதற்குக் காத்திருப்பதாக விமர்சனம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க வார்டன் கல்லூரி பேராசிரியர் ஜெரமி சீகல் கூறுகையில், பெடரல் ரிடர்வ் தற்போது அவசர கால அடிப்படையில் 75 அடிப்படை புள்ளிகளையும், செப்டம்பர் மாதத்தில் கூடுதலாக 75 அடிப்படை புள்ளிகளையும் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா திட்டமிட்டபடி கருவூல பத்திரங்களை மீண்டும் வாங்கும் திட்டத்தைத் தொடங்கியது. அக்டோபர் மாத இறுதிக்குள் 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள கருவூலப் பத்திரங்களை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் விரைவில் அவசர வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த நடவடிக்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள கருவூல பத்திரங்கள் மீண்டும் வாங்கப்பட்டு 50 பில்லியன் டாலர் அளவை அமெரிக்க அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கச் சந்தையில் பணப்புழக்கம் ஆதரிக்கப்படும், இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அடுத்து முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாக உள்ளது.
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் அவசரக்கால வட்டி விகிதக் குறைப்பும், இந்த T-bills பைபேக் திட்டமும் அமெரிக்க வர்த்தக சந்தையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications