கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் பிரச்சனையானது, இன்று வரையில் நீட்டித்துக் கொண்டு உள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களாகவே மீண்டும் மிக மோசமான தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் உக்ரைன் மக்கள் தங்கள் உயிர்களுக்கு அஞ்சி மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தொடர்ந்து உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படி பற்பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை.
எங்கிருந்தும் எண்ணெய் வாங்குவோம்
கடந்த வாரத்தில் அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், நாங்கள் எந்த நாட்டில் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என, இதுவரை எந்த நாடும் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது இல்லை. உங்கள் கொள்கையில் நீங்கள் தெளிவாக இருந்தால் அதாவது, எரிபொருள் பாதுகாப்பு, குறைவான விலையில் எரிபொருள் தர வேண்டும் என்ற கொள்கை இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கலாம் என கூறியிருந்தார்.
இது அரசின் கடமை
மேலும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என எந்த நாடும் எங்களுக்கு தடை விதிக்கவில்லை. அப்படியே தடை விதித்தாலும் இந்திய மக்களுக்கு தேவையானதை வழங்க வேண்டியது அரசின் கடமை. நாங்கள் எந்த நாட்டிலும் கச்சா எண்ணெய் வாங்குவோம். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார். இதுவே பலதரப்பிலும் சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது.
சாகலின் 1 உரிமை மறுசீரமைப்பு
இந்த நிலையில் சாகலின் 1 எண்ணெய் மற்றும் கேஸ் எரிவாயு திட்டத்தின் உரிமை மறுசீரமைப்பு குறித்து, ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், தொடர்ந்து ரஷ்யாவுடன் ஆரோக்கியமான பேச்சு வார்த்தையே சென்று கொண்டுள்ளதாகவும் ஹர்தீப் சிங் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் திட்டம்
இது ஹர்தீப் சிங் கடந்த வாரம் அளித்த பேட்டிக்கு மத்தியில், அதனை மெய்பிக்கும் விதமாக அவரின் இந்த கருத்தும் வந்துள்ளது. ரஷ்யாவின் சாகலின் 1 எண்ணெய் மற்றும் கேஸ் திட்டத்திற்கு அவிக்கப்பட்ட உரிமை தொடர்ந்து வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.
ரஷ்ய நிறுவனத்தின் திட்டம்
ரஷ்யா கடந்த வாரம் எக்ஸான் மொபில்இன் 30% வெளி நாட்டு பங்குகள் குறித்து முடிவெடுத்து கொள்ள ஆணை பிறப்பித்தது. இந்தியாவின் ONGC விதேஷ் உள்ளிட்ட வெளிநாட்டு பங்குதாரர்கள் திட்டத்தில் தங்கள் பங்கேற்பைத் தக்கவைத்துக் கொள்ளுமா? அதற்கு ரஷ்யா நிறுவனம் மீண்டும் அனுமதி கொடுக்குமா? இது இந்திய சுத்திகரிப்பாளர்களுக்கு தடையில்லா சப்ளையை கொடுத்து வந்த நிலையில், இனி அந்த நிலை எப்படி மாறும் என்பதும் கேள்வி எழுந்துள்ளது.
தக்க வைத்துக் கொள்ளுமா?
இந்தியா கடந்த ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினை, ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்கள் குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் பேரலுக்கு 100 டாலர்களை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியா தங்களுக்கு தடையில்லா சப்ளை கிடைக்க சரியான நடவடிக்கை எடுக்கலாம். சாகலின் 1 ஒப்பந்தத்தினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள போராடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளின் நிலை?
எனினும் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு இது குறித்து என்னவாக இருக்கும். இது மேற்கொண்டு மேற்கத்திய நாடுகள் மத்தியில், பெரும் சலசலப்பினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் முடிவு என்னவாக இருக்கும். இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications