தொலைகாட்சிப் பெட்டியை தயாரிக்க பயன்படுத்தப்படும் open cell-களை இறக்குமதி செய்வதற்கான, 5% சுங்க வரியை மீண்டும் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக அளிக்கப்பட்டிருந்த ஓராண்டு விலக்கு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் இந்த சுங்க வரி அமலுக்கு வருகின்றது.
இதன் காரணமாக டிவிகளின் விலை இனி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி வாருங்கள் இதனை பற்றி பார்க்கலாம்.
டிவி விலை அதிகரிக்கும்
அதுவும் இந்த வரி அதிகரிப்பானது இந்த விழாக்கால தருணத்தில் வந்திருப்பது, விற்பனை பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புறம் அரசின் இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க முடியும் என்றாலும், மறுபுறம் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பது கவலையளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
டிவி தயாரிப்பில் முக்கிய உதிரி பாகம்
டிவி உற்பத்தியில் முக்கிய உதிரி பாகமாக கருதப்படுவது டிவி பேனல்கள் ஆகும். அத்தகைய உதிரி பாகங்களுக்கு ஒராண்டுக்கு 5% வரி சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையானது செம்டம்பர் 30-வுடன் முடிவுக்கு வரும் என்றும் அரசாங்கம் கூறியிருந்தது. இதனால் இனி டிவியின் விலை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விழாக்கால பருவத்தில் விலை அதிகரிக்கும்
இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் பொதுவாக இந்த டிவி உள்ளிட்ட பல வீட்டுக்கு தேவையான பொருட்களின் விற்பனையானது களைகட்டும். ஆனால் இந்த நேரத்தில் எல்இடி மற்றும் எல்சிடி டிவிகளில் பயன்படுத்தப்படும் ஸ்கீரின்கள் விலை அதிகரிக்கும் போது, டிவிகளின் விலையும் அதிகரிக்கும்.
டிவி பேனல் விலை அதிகரிப்பு
செப்டம்பர் முதல் பேனல் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே விலையை 20 - 25% அதிகரித்துள்ளதால் பேனல் விலைகள் அதிகரித்து வருகின்றன. டிவிக்களின் விலையில் சுமார் 60% திரையை உருவாக்கும் ஒபன் செல் பேனல் விலையை பொறுத்து இருக்கும். இந்த நிலையில் இந்த வரி அதிகரிப்பு மேற்கொண்டு விலையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எங்கிருந்து அதிக இறக்குமதி
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஓபன் செல் பேனல்கள் அதிகளவில் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த நடவடிக்கையினால் சீனாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், நீண்டகால நோக்கில் பார்க்கும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பெருக இது வாய்ப்பாக அமையும். இந்தியாவுக்கு நல்ல விஷயம் என்றால், அது நமக்கும் நல்ல விஷயம் தானே.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications