கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பார்தி ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், தங்களது கட்டண அதிகரிப்பை உறுதி செய்துள்ளன.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான போட்டியினால் பெருத்த நஷ்டத்தினை கண்டுள்ளது.
இந்த நிலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையை செலுத்தவும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
கட்டணம் அதிகரிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளன
இந்த ஏற்கனவே பெருத்த நஷ்டத்தில் இருந்த நிறுவனங்களுக்கு இது பெருத்த அடியாகவும் உள்ளது. இதற்கு முன்பே ஐயூசி கட்டண முறையும் தலையெடுத்தது. இந்த நிலையிலேயே, இந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின. இதனால் இனி மலிவான இலவச அழைப்புகளுக்கும் டேட்டாகளுக்கும் முடிவு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
அரசு கட்டண விகிதம்
ஆக மோசமான நிலையில் இருக்கும் தொலைத்தொடர்பு துறையானது டிசம்பர் மாதத்தில் இருந்து புத்துயிர் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டணங்களின் அதிகரிப்பு பற்றிய முழு அளவும் தெரியவில்லை என்றாலும், நிச்சயம் அதிகரிப்பு உண்டு என்பது தெளிவாகிவிட்டது. இதில் இரண்டு முறைகளின் மூலமாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இலாபத்தை அடைய முடியும்,. ஒன்று கட்டண அதிகரிப்பு. இரண்டாவது அரசின் அடிப்படை கட்டண விகிதம் சீரமைப்பு. இது நிச்சயம் இந்த நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை கட்டண விகிதங்களை சீரமைக்கலாம்
இதன் அடிப்படையில் டிராய் அடிப்படை கட்டண வழி முறைகளை சீரமைக்கலாம். இந்த நிலையில் இப்போதைக்கு ஐயூசி கட்டணங்கள் அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் டேட்டா விலைகள் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது. அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு சந்தையில் நுழைந்ததில் இருந்தே, வயர்லெஸ் டேட்டாகளின் விலை குறைந்துள்ளது. இது சில மதிப்பீடுகளின் படி ஒரு ஜிபி டேட்டாவுக்கு 2.3 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
கட்டணம் அதிகரிக்கலாம்
எனினும் டிராய் மதிப்பீட்டின் படி கடந்த 2015ல் ஒரு ஜிபி டேட்டாவுக்கு 226 ரூபாயாக செலவாகியுள்ளது. இந்த நிலையில் SBICAP செக்யூரிட்டிஸ் ஆய்வாளர்கள் டிராய் ஒரு நிமிடத்திற்கு 10 பைசாவாக நிர்ணயிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தற்போதைய ஐயூசி கட்டண முறையை விட 67 சதவிகிதம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதே டேட்டா தரவுகள் ஒரு ஜிபிக்கு 3 ரூபாயாக இருக்கலாம். இது முந்தைய தரவுகளுடன் ஒப்பிடும் போது 20 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குறைந்த பட்ச கட்டணம் திருத்தம்
மேலும் இதே குறைந்த பட்ச ரீசார்ஜ் கட்டணங்கள் விலை 40 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஸ்மார்ட் ரீசார்ஜ் என அழைக்கப்படும் ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் 23 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செல்லுபடியை 28 நாட்களுக்கு நீடித்து வழங்கி வருகிறது.வோடபோனிலும் இந்த கட்டணம் 24 ரூபாயாகும். ஆனால் ஜியோவின் குறைந்த பட்சம் ரீசார்ஜ் 28 நாட்களுக்கு 5 ரூபாய் ஆகும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications