அமெரிக்க அரசு இந்திய பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரி விதித்திருக்கும் நிலையில் இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர் . இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.
டிரம்பின் வரி அறிவிப்பு இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்தியாவை சேர்ந்த மருந்து, ஜவுளி, நகை மற்றும் நவரத்தினங்கள் என பல்வேறு துறைகளையும் பாதிக்க இருக்கிறது. இந்த சூழலில் நடவடிக்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து மத்திய அரசு மக்களவையில் விளக்கம் தந்திருக்கிறது.

இது தொடர்பாக மக்களவில் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உலகப் பொருளாதாரங்களுடன் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தொடரும்போதும் இந்தியா தேசிய நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிவித்தார். இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த வரி விதிப்பின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று குறிப்பிட்ட அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனை குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நான்கு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன என குறிப்பிட்டிருக்கும் அவர் இந்தியா தன்னுடைய நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என திட்டவட்டமாக தெரிவித்தார். தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என குறிப்பிட்டு பேசிய அவர் உலக பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான இடம் இந்தியாவிற்கு இருக்கிறது என சுட்டிக்காட்டினார் .
தேசிய நலனை கருத்தில் கொண்டு தான் அனைத்து முடிவுகளையும் அரசு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுவாக எந்த ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்த மேற்கொண்டாலும் அரசு தேசிய நலனுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும் என குறிப்பிட்ட அவர் அண்மையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு வர்த்த ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டினார். இந்தியா அமெரிக்க இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்த போதிலும் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்படாமலே இருந்தது.


Click it and Unblock the Notifications