தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. தற்போது தேர்தல் வாக்கு பதிவு முடிந்திருக்கிறது. மே நான்காம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பது மே நான்காம் தேதி நண்பகல் அளவில் தெரிந்து விடும்.
இந்த சூழலில் தான் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான மகளீருக்கு தற்போது ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மே மாதத்தில் தங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என்பதுதான் அந்த குழப்பம். திமுக 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இதனால் பெருவாரியான பெண்கள் வாக்குகள் திமுகவுக்கு கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியும் அமைத்தது 2023 ஆம் ஆண்டிலிருந்து மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கமும் செய்யப்பட்டது. தற்போது 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் மகளிர் உரிமைத் தொகையை வழங்க முடியாது , எதிர்கட்சிகள் நீதிமன்றத்திற்கு செல்ல கூடும் என்பதால் கடந்த பிப்ரவரி மாதமே சர்ப்ரைஸாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு 5000 ரூபாயை வரவு வைத்தது.
பிப்ரவரி மாதம் மகளிர் உரிமைத்தொகை பணத்தோடு சேர்த்து மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கான முன்பணமாக 2000 ரூபாய் என்றும் கோடைகால சிறப்பு தொகுப்பாக 2000 ரூபாய் என்று மொத்தம் 5000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் கணக்கில் வரவு வைத்தார்கள். இந்த நிலையில் மே மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை தங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படுமா என பெண்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மே 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. ஏற்கனவே கோடைகால சிறப்பு தொகுப்பாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதால் ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை திமுகவே ஆட்சி அமைக்கும் பட்சத்தில் ஜூன் மாதத்தில் இருந்து பழையபடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படலாம் அல்லது ஆட்சி அமைத்த உடனேயே முதலமைச்சர் ஸ்டாலின் முதல் கையெழுத்தாக மகளிர் உரிமை தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டால் ஜூன் மாதத்தில் இருந்தே பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக கிடைக்க தொடங்கும்.
அதிமுக குலவிளக்கு திட்டத்தில் 2000 ரூபாய் வழங்கும் என்றும், தவெக பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்கும் என்றும் வாக்குறுதி அளித்து இருக்கின்றன. இவற்றில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் புதிய அரசு அமைந்து பதவியேற்று அமைச்சரவை கூடி திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும். எனவே ஜூன் மாதம் முதல் இந்த பெண்களுக்கு இந்த தொகை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications

