சென்னை: 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு அரசு எலக்ட்ரானிக்ஸ், கப்பல் கட்டுமானம், வாகன உற்பத்தி என பல்வேறு பிரிவுகளிலும் பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
தற்போது இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரம் கொண்ட அளவை எட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் எஸ்ஜிடிபி ஆண்டு தோறும் 20.48% என வளர்ச்சி அடைய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது மாநிலத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது 16% என எஸ்ஜிடிபி கொண்டுள்ளது. இந்த வளர்ச்சி அப்படியே நீடித்தால் தமிழ்நாடு 2030 என இல்லாமல் 2032 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியின் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக பல்வேறு துறைகளிலும் சிறந்த வளர்ச்சியை பெற்று வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மாவட்டங்களும் சமமான பொருளாதார வளர்ச்சியை அடைந்து மாநிலத்தின் வளர்ச்சியில் பங்காற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. மாவட்டம் தோறும் டைடல் பார்க்குகள், மாவட்டம் தோறும் தொழில்பூங்காக்கள் என தொழில் முதலீடுகளில் பெரும் கவனம் செலுத்துகிறது.
பல்வேறு மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவற்றையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தான் அதிக பங்காற்றுகின்றன. ஏற்றுமதி மட்டுமில்லாமல் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாகவும் இருக்கிறது. தமிழ்நாடு 2024 ஆம் ஆண்டில் 52 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாளராக வளர்ச்சி அடைந்திருக்கிறது.
2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் இரட்டை இலக்க வளர்ச்சிக்கு செகண்டரி துறையும், சேவைகள் துறையும் மிகச் சிறந்த அளவில் பங்காற்றி இருக்கின்றன. குறிப்பாக உற்பத்தி துறை 14.7 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது, இது தேசிய சராசரியான 4.5 சதவீதத்தை விட மூன்று மடங்கு அதிகம் அதேபோல கட்டுமான பிரிவு 11.6 சதவீதம் என்ற வளர்ச்சி அடைந்திருக்கிறது . சேவை துறை ஒட்டுமொத்தமாக 11.3% வளர்ச்சியை அடைந்திருக்கிறது, இதில் ரியல் எஸ்டேட் 12.4 சதவீதம் , பொது மேலாண்மை 14.2% , டிரான்ஸ்போர்ட், ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் ஆகியவை 11.3% வளர்ச்சியை பெற்றிருக்கின்றன.
சென்னையில் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி , திருப்பூர் கோயம்புத்தூரில் துணிமணி உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்திக்கு வேலூர், ஆம்பூர், மின்னணு மற்றும் ஐடி பிரிவுக்கு சென்னை ,ஓசூர், ஸ்ரீபெரும்புதூர் , புதுப்பிக்கத்தக்க எரி சக்திக்கு கோயம்புத்தூர், திருநெல்வேலி என ஒவ்வொரு மாவட்டமும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தனித்துவமான பங்கினை வழங்குகின்றன.தமிழ்நாடு அரசு 16 சதவீதம் என்ற இந்த நாமினல் எஸ்ஜிடிபியை தொடர்ந்து நீடித்தால் 2032 - 33 ஆம் ஆண்டு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நிச்சயம் எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications