டாடா சன்ஸ் நிறுவனத்தை 2-3 ஆக உடைக்க திட்டம்போடும் நோயல் டாடா.. அதிர்ச்சியில் சந்திரசேகரன் டீம்!

டாடா குழுமம் ஆர்பிஐ விதிகளுடனும், ஐபிஓ செயல் முறையை எதிர்த்துப் போராடுவதைத் தாண்டி நிர்வாகத்திற்குள் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் டாடா சன்ஸ் நிர்வாக குழுக் கூட்டத்தில் சந்திரசேகரன் நியமனத்திற்காக நோயல் டாடா தவிர அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து நின்றது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதே கூட்டத்தில் டாடா சன்ஸ் நிர்வாக குழுவிற்கு டாடா டிரஸ்ட் சார்பாக நோயல் டாடா பல பரிந்துரைகளைக் கொடுத்தார் அதில் முக்கியமாக டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடாமல் இருக்க டாடா சன்ஸ் நிறுவனத்தை 2 -3 பிரிவுகளாகப் பிரிப்பது மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடுலதை தவிர்க்க முடியும் என நோயல் டாடா தரப்பில் கூறப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தை 2-3 ஆக உடைக்க திட்டம்போடும் நோயல் டாடா.. அதிர்ச்சியில் சந்திரசேகரன் டீம்!

டாடா குழுமத்தில் பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத, துணை நிறுவனங்கள், கிளை நிறுவனங்கள், கூட்டணி நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் என கிட்டதட்ட 100 நிறுவனங்களின் தாய் நிறுவனமாக இருப்பது டாடா சன்ஸ். ஆர்பிஐ விதிகளின் படி நிதித்துறையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வர வேண்டும் என்பதற்காக NBFC நிறுவனங்களின் அப்பர் லேயர் நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

ஆனால் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட், இந்நிறுவனத்தைத் தொடர்ந்து தனியார் நிறுவனமாகவே வைத்திருக்க விரும்புகிறது.

இதற்கான வழிகளை டாடா டிரஸ்ட், டாடா சன்ஸ் நிர்வாகமும் கடந்த சில வருடங்களாக ஆராய்ந்து வரும் வேளையில் டாடா சன்ஸ் நிறுவனத்தை துறை வாரியாகவோ அல்லது ஒத்த வர்த்தக மாடல் கொண்ட பிரிவுகள் வாரியாகவோ 2-3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டால் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதில் இருந்து தவிர்க்கலாம் என்ற யோசனையை நோயல் டாடா, டாடா சன்ஸ் நிர்வாக குழுவின் முன் வைத்துள்ளார்.

ஆனால் சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் நிர்வாகம் இந்த பரிந்துரையை ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சந்திரசேகரன் நியமனத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டு இருக்கும் வேளையில், இந்த பரிந்துரையை எப்படி ஏற்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பல பிரிவுகளாக உடைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது, அப்படி உடைந்தால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தலைவர் என்ற வகையில் நிர்வாகம் மாறும், இதனால் டாடா குழுமத்தில் decentralized நிர்வாக முறைக்கு மாறுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதோடு நோயல் டாடாவின் வாரிசுகள் 3 பேர் தற்போது டாடா குழுமத்தின் முக்கிய பதவிகளில் இருக்கும் வேளையில், இவர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்பது நோயல் டாடாவின் நீண்ட கால கனவாக இருக்கும் வேளையில், 2-3 ஆக நிறுவனத்தை உடைக்கும் பட்சத்தில் இது எதிர்காலத்தில் சாத்தியமாகும்.

இதேபோல் டாடா சன்ஸ் நிறுவனத்தை உடைக்கும் போது நிறுவனத்தின் மதிப்பீட்டு, இணைப்பு, டீமெர்ஜர், முதலீட்டாளர்கள் ஒப்புதல், நிர்வாக முடிவு எனப் பல பணிகள் உள்ளது. இதனால் இதை உடனடியாக சாத்தியப்படுத்த முடியுமா..? மேலும் ஆர்பிஐ சில நாட்களுக்கு முன்பு CIC மற்றும் NBFC உரிமத்தைத் திருப்பி கொடுத்த போது அதை ஏற்க மறுத்து விதிகளின் படி 2027ஆம் ஆண்டில் துவக்கத்தில் ஐபிஓ வெளியிட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+