கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அட்ரிஷன் விகிதமானது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியது.
தேவையானது அதிகரித்து வந்த நிலையில், ஆள்பற்றாக்குறையால் கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி துறையானது பெரும் சவால்களை எதிர் கொண்டு வந்தது.
இதற்கிடையில் ஊழியர்களை தக்கவைத்துள்ள பல சலுகைகளையும் ஐடி நிறுவனங்கள் வழங்கி வந்தன. குறிப்பாக சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு, வழக்கத்திற்கு மாறாக ஒரிரு முறை உயர்வு என வழங்கி வந்தன.
தேவையில் தாக்கம்
இந்த போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம் என நிபுணர்களும் கூறி வந்தனர். இது ஐடி ஊழியர்கள் மத்தியில் மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்பட்டது. எனினும் 2023ம் நிதியாண்டில் அட்ரிஷன் விகிதமானது அதிகமாக இருக்கலாம். எனினும் தேவையில் இந்த சமயத்தில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணியமர்த்தல் அதிகம்
கடந்த சில காலாண்டுகளாக தேவையானது அதிகம் இருந்து வந்த நிலையில், அட்ரிஷன் விகிதமும் பெரும் சவாலான ஒரு விஷயமாக இருந்து வந்தது. இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க ஐடி நிறுவனங்களும் பணியமர்த்தலை அதிகரித்து வந்தன. சம்பளமும் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது கணிசமாக உயர்ந்துள்ளன. குறிப்பாக திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும் பணியமர்த்திக் கொள்ள நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.
வலுவான வளர்ச்சி
இதற்கிடையில் ஐடி நிறுவனங்களும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்றன. தொடர்ந்து பல்வேறு வணிகங்களும், டிஜிட்டலுக்கு மாறி வரும் நிலையில் டிஜிட்டல் தேவை அதிகரித்துள்ளது. கிளவுட் டிரான்ஸ்பர்மேஷன், புதிய தொழில் நுட்பங்கள் என பல காரணிகளுக்கு மத்தியில், நிறுவனங்கள் இதுவரையில் தொடர்ந்து அதிகளவில் பணியமர்த்தி வருகின்றன.
மார்ஜினில் தாக்கம் இருக்கலாம்
எனினும் அடுத்து வரும் 2 காலாண்டுகளுக்கு விலை விகிதமானது கண்கானிக்கப்படும். விலை நிர்ணயம் என்பது முக்கிய காரணியாக இருக்கும். இது 2023ம் நிதியாண்டின் வருவாயில் எதிரொலிக்கலாம். இது நிறுவனங்களின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் 4வது காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிப்பினால் தாக்கம் இருக்கலாம்
மொத்தத்தில் பெரியளவிலான தாக்கம் இல்லாவிட்டாலும், இது தேவை குறையாவிட்டாலும், விலை அதிகரிப்பினால் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மார்ஜினில் தாக்கம் ஏற்படும் போது, அதனை ஈடுகட்ட செலவினங்களை குறைக்க முற்படலாம். புதிய பணியமர்த்தலை தற்போதைக்கு குறைக்க வழிவகுக்கலாம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications