காஞ்சிபுரம்: சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியை தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது.
பரந்தூரில் விமான நிலையத்தை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை மத்திய , விமான போக்குவரத்து ஆணையத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்ததை அடுத்து தமிழ்நாடு அரசு விமான நிலையத்தை அமைப்பதற்கான நிலங்களை கைப்பற்றுவது, டெண்டர் வெளியிடுவது உள்ளிட்ட அடுத்த கட்டப் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. சென்னைக்கு இரண்டாவதாக விமான நிலையம் தேவை, அது பரந்தூர் பகுதியில் அமைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் பகுதியில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் இணைப்பு வழங்கும் வகையில் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ வழித்தடத்தை அரசு பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு சாலை மற்றும் மெட்ரோ ரயில்கள் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெறும் நிலையில் பரந்தூருக்கு என ரயில் நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு மத்திய இணை அமைச்சர் சோமண்ணா பதிலளித்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா சென்னைக்கு வருகை தந்திருந்தார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு தனி ரயிலில் சென்ற அவர் வழிநடங்கிலும் ரயில்வே பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணிகளை தொடர்ந்து காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் சோமண்ணா மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலையப் பகுதியில் ரயில் நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் பரந்தூர் பகுதியில் ரயில் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனை நடந்து வருகிறது என கூறினார். விமான நிலையத்துடன் இணைப்பை ஏற்படுத்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டால் பரந்தூர் பகுதிக்கு அது இன்னும் ஒரு நற்செய்தியாக அமையும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications