2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வசதி துறைக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்பது குறித்தும் பலரும் பல எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் EY இந்தியா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவு தலைவரான கௌரவ் கார்னிக் ரியல் எஸ்டேட் துறை நமது பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கிறது, பொருளாதார முன்னேற்றத்தை முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளும்போது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும் என கூறியுள்ளார். ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சாதகமான அறிவிப்புகள் வரும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குடியிருப்பு பிரிவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். மலிவு விலை வீடுகளுக்கான தகுதி என்பது அதன் மதிப்பை விட பிளாட்டின் அளவை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற மாற்றத்தோடு மலிவு விலை வீட்டு வசதிகளுக்கான வரி விடுமுறை அதாவது தற்காலிகமாக வரியை ரத்து செய்யக்கூடிய முறையை மீண்டும் அறிமுகப்படுத்தலாம் என அவர் ஆலோசனை தெரிவிக்கிறார்.
மேலும் 2022 ஆம் ஆண்டுடன் காலாவதியான கடன் இணைக்கப்பட்ட மானியம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது மேலும் வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி தொகையை சுட்டிக்காட்டி வருமான வரி விலக்கை பெற முடிகிறது. ஆனால் ஓர் நிதியாண்டில் 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கணக்கு காட்ட முடியும், இதனை குறைந்தது 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வாடகை வீட்டு வசதிக்கான குறைந்தபட்ச வரி ஊக்கத்தொகையை அரசு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசு அனைவருக்கும் வீட்டு வசதி என்ற இலக்கை நிறைவேற்ற குறிப்பிட்ட இந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
REIT சந்தையில், REIT யூனிட்களுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரி முறையை பட்டியலிடப்பட்ட ஈக்விட்டி பங்குகளுக்கு இணையாக கொண்டு வர வேண்டியது அவசியம் என அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக மூன்று கோடி வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதலை அளித்துள்ளது. 2015 -16ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா தகுதியான கிராம புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களை குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு உதவி செய்து வருகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications