மும்பை: 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை இந்திய ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரை குறைத்திருக்கிறது . இதன் விளைவாக வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் நகை கடன்கள் உள்ளிட்டவற்றின் மீதான வட்டியை 1 சதவீதம் வரை குறைத்திருக்கின்றன.
ஆர்பிஐ நிதி கொள்கை குழு கூட்டம்: ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் தான் மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் தொடங்கி இருக்கிறது. இன்று முதல் 6ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

ரெப்போ வட்டி குறையுமா: ஆகஸ்ட் 6 ஆம் தேதியான புதன்கிழமை அன்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அறிவிப்பார். மேற்கொண்டு ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடன்களுக்கான வட்டியை இன்னும் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது.
1% வரை குறைப்பு: கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த கூட்டத்தில் தலா 25 அடிப்படை புள்ளிகள் என ரெப்போ வட்டி குறைக்கப்பட்டது, ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில் 50 புள்ளிகள் என குறைந்து ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை 1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதம் குறைந்து இருக்கிறது.

குறையும் பணவீக்கம்: அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்து இருக்கிறது . அது தவிர இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த சில மாதங்களாகவே குறைந்து வருகிறது. ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீடு 2.1 சதவீதமாக இருக்கிறது, 2019ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக நுகர்வோர் விலை குறியீடு இந்த அளவிற்கு குறைவு கண்டிருக்கிறது. பல்வேறு பொருட்களின் விலைவாசி குறைந்தது இந்த விலை குறைவுக்கும் காரணமாக இருக்கிறது.
25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு?: பணவீக்கம் குறைந்து வருவதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வட்டி விகிதத்தை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நோமுரா தரகு நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு 35 சதவீதம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இத முறை 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதம் குறையும் என்றும் கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.
பண்டிகை காலம் வருவதால் எதிர்பார்ப்பு: எலாரா கேபிடல் நிறுவனம் ஜூலை மாதத்தில் பணவீக்க விகிதம் 2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே வேளையில் அமெரிக்க அரசாங்கத்தின் வரி விதிப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் சற்றே தாக்கத்தை ஏற்படுத்தலாம் , எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைக்கும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது .
நுகர்வு போக்கை அதிகரிக்க திட்டம்: எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் பண்டிகை காலம் வர இருப்பதால் நுகர்வு போக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ வட்டியை குறைத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடன்களின் வட்டி மேலும் குறையும். இதனால் மக்கள் அதிக அளவில் கடன் வாங்க முன்வருவார்கள், இதனால் வீடு, வாகன விற்பனைகள் அதிகரிக்கும் மக்களிடையே நுகரும் போக்கு உயரும் இது பல்வேறு தொழில்களுக்கும் நன்மை பயக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications