இந்தியா அரசு 2023 - 24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பணவீக்கம், வட்டி விகித அதிகரிப்பு, சர்வதேச பொருளாதார மந்த நிலை என பல காரணிகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இந்த பட்ஜெட் தாக்கலில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்களின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
தங்கத்தின் தேவையானது சீனா
தங்கம் விலையானது பலவீனமான டாலருக்கு மத்தியில் 8 மாத உச்சத்தில் காணப்படுகின்றது.
தற்போது சீனாவிலும் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தாலும், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவிலும் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகையாக ஏற்றுமதி என்னவாகும்?
தங்கம் விலையானது தொடர்ந்து நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் தங்கம் இறக்குமதியானது சரிவடையலாம். இதனால் நகையாக ஏற்றுமதி செய்வதும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் நகை ஏற்றுமதி
தங்கம் மட்டும் அல்ல, இந்தியாவில் இருந்து தங்கம் உள்ளிட்ட ஆபரண ஏற்றுமதியானது மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஆக வரவிருக்கும் பட்ஜெட்டில் நகை ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய வரி குறைப்பு அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரிக்கலாம். இதனால் இத்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
நகைத் துறையினர் கோரிக்கை
நகைத் துறை சார்பிலும் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. நாடு முழுவதும் பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வரும் நிலையில், தொடர்ந்து சமீபத்திய மாதங்களாக விலை உச்சத்தினை எட்டி வரும் நிலையில் நகை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியிருந்தது.
வரி அதிகரிப்பா?
இது ஒரு புறம் எனில் மறுபுறம் அரசு அத்தியாவசியமற்ற தங்கம் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே இறக்குமதி வரியுடன் சேர்த்து, செஸ் என மற்ற வரிகளும் சேரும் என்பதோடு, தங்கம் விலையும் உச்சத்தில் உள்ள நிலையில் இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications