யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? – ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்..

இந்தியாவில் யுபிஐ மூலம் நடத்தப்படும் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்முடைய செல்போனில் இருக்கும் யுபிஐ செயலிகள் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தாலே போதும் எளிமையாக நம்மால் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பி விட முடியும்.

யுபிஐ பயன்பாடு: சிறு வணிகர்கள் தொடங்கி பெரிய தொழில் நிறுவனங்கள் வரை எங்கு பார்த்தாலும் யுபிஐ பயன்பாடு எளிமையாகப்பட்டிருக்கிறது. கடந்த 2ஆம் தேதி இந்தியாவில் ஒரே நாளில் 70.7 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்ததாக நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது. இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது என்றும் தெரிவித்திருந்தது .

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? – ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்..

யுபிஐ பயன்பாட்டுக்கு கட்டணமா?: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவிடம் யுபிஐ பயன்பாடு தொடர்பாக ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது அவர் அதற்கு அவர் அளித்து இருக்கக்கூடிய பதில் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது . மும்பையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களுக்கு இன்று அறிவித்தார்.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? – ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்..

ஆர்பிஐ ஆளுநர் விளக்கம்:அப்போது யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர் யுபிஐ எப்பொழுதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறியது கிடையாது என தெரிவித்திருக்கிறார். இதற்கான கட்டணங்களை யாரேனும் ஒருவர் செலுத்தி தான் ஆக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார் . இந்த யுபிஐ பரிவர்த்தனை மாடல் அப்படியே நீடித்த நிலைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான செலவை யாரேனும் ஒருவர் ஏற்று தானே ஆகவேண்டும் என பதிலளித்திருக்கும் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அதை தனி நபர்கள் செலுத்துகிறார்களா அல்லது ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்த்து செலுத்துகிறார்களா என்பதை தாண்டி யாரேனும் ஒருவர் செலவை ஏற்க வேண்டும் என்பது முக்கியம் எனக் கூறியுள்ளார்.

யுபிஐ இலவசம் நீடிக்காதா?: தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ அல்லது பேமென்ட் கேட்வே செயலிகளுக்கோ விதிக்கப்படுவது இல்லை, அரசு தான் இதற்கான கட்டணங்களை ஏற்கிறது. இந்நிலையில் சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்த பதில் நீண்ட நாளைக்கு யுபிஐ சேவைகள் இலவசமாகவே இருக்காது அதற்கென ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நாம் செலுத்தக்கூடிய காலம் வரப்போகிறது என்பதையே உணர்த்துகிறது.

ஐசிஐசிஐ அறிவிப்பு: முன்னதாக ஐ சி ஐ சி ஐ வங்கி யுபிஐ பேமெண்ட் அக்ரிகேட்டர் நிறுவனங்களுக்கு எஸ்கிரோ கணக்கில் வரும் பணத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி ஐசிஐசிஐ வங்கியில் எஸ்கிரோ கணக்கு இருந்தால் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் தலா 0.02 ரூபாயும், மற்ற வங்கியில் இருக்கும் கணக்கிற்கு 0.04 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என பேமெண்ட் அக்ரிகேட்டர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த நிதி சுமையும் விதிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து வங்கிகளும் இப்படி கட்டணம் விதித்தால் பேமெண்ட் அக்ரிகேட்டர் நிறுவனங்கள் அதனை வாடிக்கையாளர் மீது சுமத்த வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+