நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதில் இரண்டு முக்கியமான மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது.
இந்தியாவில் காப்பீடு துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு துறையாக இருக்கிறது. இந்த காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான காப்பீடு சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது . காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் விமான துறையை போல தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் இதில் அதிகமாகும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காப்பீடுக்காக இந்தியர்கள் வழங்கக்கூடிய பான் மற்றும் ஆதார் விவரங்கள் வெளிநாட்டவர்கள் கைகளுக்கு செல்லும் என்பதால் டிஜிட்டல் மோசடிகள் அதிகரிக்கும் என்றும் காங்கிரஸ் எம்பி சக்தி சிங் கோயல் கவலை தெரிவித்தார் .
நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி இந்த மசோதாவை தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இதன்பின் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தந்தார். எதிர்கட்சிகளின் திருத்தங்களும் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு மாநிலங்கள் அவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து இது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக மாற்றப்படும்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காப்பீடு துறையில் 100% முதலீட்டை எந்த தடையும் இல்லாமல் மேற்கொள்ள முடியும். இது காப்பீடு துறையில் போட்டியை அதிகரிக்க செய்து பிரீமியம்களை குறைக்கவும் தரமான சேவைகள் கிடைப்பதையும் உறுதி செய்யும்.

இந்தியாவில் அரசு நிறுவனங்கள் மட்டுமே அணுமின் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கும் அணுமின் உற்பத்திக்கான அனுமதியை வழங்கக்கூடிய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதாவை மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார் .
இந்த மசோதாவின் மீதான விவாதம் நடைபெற்றது .அதில் நாட்டில் அணுக்கருவிச்சால் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அணுசக்தி கருவிகளை விநியோகம் செய்பவர் பொறுப்பேற்கும் பிரிவு மசோதாவில் இல்லை இது இந்தியாவுக்கு தீங்கை ஏற்படுத்தும் என காங்கிரஸ் எம்பி மணீஸ் திவாரி கூறினார். மேலும் கதிரியக்க கழிவுகளை எப்படி கையாள போகிறார்கள் என்பதற்கான செயல்முறையும் மசோதாவின் இடம்பெறவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.
மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு பரிந்துரைக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் தனியார் அனுமதித்து அணுமின் உற்பத்தியை விரிவு படுத்துவது ஆபத்தான நடவடிக்கை என காங்கிரஸ், உத்தவ் சேனா ,சமாஜ்வாதி ,திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications