அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதில் இருந்து கச்சா எண்ணெய் விலை பெரிய அளலில் சரிந்து வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் Windfall வரியை குறைத்துள்ளது. முன்பு ஒரு டன்னுக்கு 4400 ரூபாய் வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 3500 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பாவில் வங்கிகள் திவாலாகியும், பணப்புழக்க நெருக்கடியிலும் மாட்டிக்கொண்டு இருக்கும் காரணத்தால் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பும் ஏற்படும் என்ற அச்சம் அனைத்து துறைக்கும் தற்போது வந்துள்ளது. இதனால் உலக நாடுகள் கச்சா எண்ணெய் தேவை குறையும் என்பதை உணர்ந்து வாங்கும் அளவீட்டை குறைத்துள்ளது.
இதன் வாயிலாக கடந்த ஒரு வார காலத்தில் WTI கச்சா எண்ணெய்-யின் ஏப்ரல் மாதம் ஆர்டர் விலை 72.50 டாலரில் இருந்து 64 டாலர் வரையில் குறைந்துள்ளது. ரீடைல் சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை 70 டாலர் வரையில் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை கடந்த வருடம் ஜூன் மாதம் 124 டாலரில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க வங்கிகள் திவால் மூலம் முதலீட்டு சந்தையில் பெரும் தடுமாற்றம் உருவாகியுள்ளது. பங்குச்சந்தையை விட்டு வெளியேறும் பணம் தங்கம் மீது குவிகிறது, பொருளாதார மந்த நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
மத்திய அரசு
இந்த நிலையில் தான் மத்திய அரசு, இந்தியாவில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் Windfall வரியை குறைத்துள்ளது. முன்பு ஒரு டன்னுக்கு 4400 ரூபாய் வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 3500 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா
இதேவேளையில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல், விமான எரிபொருள் ஆகியவை அதிகரித்து வரும் வேளையில், டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 50 பைசாவில் இருந்து 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், விமான எரிபொருள் மீது தொடர்ந்து ஜீரோ வரி தொடர்கிறது.
மார்ச் 21 முதல்
இப்புதிய வரி மாற்றம் அனைத்தும் மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வரும் வேளையில் இந்தியாவில் மலிவான விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கி வெளிநாடுகளுக்கு டீசல்-ஆக சுத்திகரிப்பு செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதலான வரியை செலுத்த வேண்டும். மேலும் கச்சா எண்ணெய் மீதான Windfall வரி 15 மாத சரிவில் உள்ளது.
OPEC நாடுகள்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைய முக்கியமான காரணம் நுகர்வு அளவு குறையும் இதேவேளையில் உற்பத்தி அளவு குறையாமல் இருப்பது தான். OPEC நாடுகள் இதுவரையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது குறித்து எவ்விதமான முடிவுகளையும் எடுக்கவில்லை.
பெட்ரோல், டீசல் விலை
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் பல மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில், ஏப்ரல் மாதத்தில் விலை குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications