இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீது விதிக்கப்படும் windfall tax-ஐ உயர்த்துவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மீதான விண்ட்ஃபால் வரி லிட்டருக்கு தற்போது 2.5 ரூபாயாக இருக்கும் வேளையில் இது 3.5 ரூபாயாக உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் டீசல் மீதான வரி 15.5 ரூபாயில் இருந்து 25.5 ரூபாயாகவும், விமான எரிபொருள் மீதான வரி 14.5 ரூபாயில் இருந்து 22 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும் இந்த புதிய வரி இன்றே நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது நிதியமைச்சகம்.

பொதுவாக மத்திய அரசு சர்வதேச சந்தை விலை, ஏற்றுமதி லாபம், சந்தை நிலவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ட்ஃபால் வரியை தீர்மானிக்கும். இந்த நிலையில் கடந்த 2 வார தரவுகளை ஆய்வு செய்து இந்த புதிய வரி உயர்வை அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இன்றைய கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தை வர்த்தகத்தில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 6.11 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 79.50 டாலராக குறைந்துள்ளது. இதை தொடர்ந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.77 சதவீதம் குறைந்து 83.74 டாலராக உள்ளது.
பொதுவாக விண்ட்ஃபால் வரி என்பது கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும், சுத்திகரிப்பாளர்களுக்கும் மத்தியிலான லாபம் சர்வதேச சந்தையில் அதிகளவில் உயர்ந்தால் இந்த லாபத்தின் மீது கூடுதல் வருமானம் பெறுவதற்காக மத்திய அரசு இத்தகைய வரி விதிக்கும்.
இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு வருடத்திற்கு 85 பில்லியன் டாலர் அளவிலான பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை பெருமளவு இறக்குமதி செய்து பூர்த்தி செய்து வந்தாலும், 4 முக்கிய நிறுவனங்கள் தனது சுத்திகரிப்பில் பெரும் பகுதியை ஏற்றமதி செய்து வருகிறது, இதில் பெரும் பகுதி தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நைரா எனர்ஜி இப்பிரிவு வர்த்தகத்தில் பெரும் ஆதிக்கம் செய்தாலும், குறிப்பிடத்தக்க அளவிலான பங்கீட்டை இந்தியன் ஆயில் மற்றும் பார்த் பெட்ரோலியம் ஆகியவை கொண்டுள்ளது. இதனால் இந்த வரி உயர்வு பாதிப்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நைரா எனர்ஜி நிறுவனங்களுக்கு தான் அதிகம்.


Click it and Unblock the Notifications