Windfall TAX: சத்தமில்லாமல் வரியை ரத்து செய்த அரசு.. யாருக்கெல்லாம் லாபம்..?!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் Windfall வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது. மார்ச் மாத இறுதியில் இருந்து ஒரு டன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விண்ட்ஃபால் டாக்ஸ் 3500 ரூபாயாக இருந்தது, தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1 ரூபாயில் இருந்து 50 பைசாவாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த வரி குறைப்பால் யாருக்கெல்லாம் நன்மை..? விண்ட்ஃபால் டாக்ஸ் மூலம் அரசு எப்படி லாபம் ஈட்டியது..?

விண்ட்ஃபால் வரி எவ்வளவு

விண்ட்ஃபால் வரி எவ்வளவு

 

கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை 9 மாதங்கள் நடைமுறையில் வைத்திருந்த மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முதல் ஒரு டன்னுக்கு 3,500 ரூபாயில் இருந்து 0 அதாவது பூஜ்ஜியமாக குறைத்துள்ளது.

இதோடு டீசல் மீதான விண்ட்ஃபால் வரி லிட்டருக்கு ரூ.1ல் இருந்து ரூ.0.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் மற்றும் ஜெட் எரிபொருள் மீது விண்ட்ஃபால் வரி பல மாதங்களாக இல்லாமல் இருந்த நிலையில் இது தொடர்கிறது.

முக்கியமான காலக்கட்டம்

முக்கியமான காலக்கட்டம்

உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் இந்த ஆண்டு மே மாதம் முதல் ஒரு நாளுக்கு 1.16 மில்லியன் பேரல் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்ததை அடுத்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் வேளையில் மத்திய அரசு விண்ட்ஃபால் வரி-யை ரத்து செய்துள்ளது.

விண்ட்ஃபால் வரி என்றால் என்ன?

விண்ட்ஃபால் வரி என்றால் என்ன?

விண்ட்ஃபால் வரி என்பது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஒன்று. விண்ட்ஃபால் டாக்ஸ் (windfall tax) என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறைக்குத் திடீரென அதிகப்படியான லாபம் கிடைக்கும் போது, இதில் இருந்து அரசு கூடுதலான வரி வருமானத்தைப் பெற விதிக்கப்படும் வரி தான். இது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

விதிக்க என்ன காரணம்

விதிக்க என்ன காரணம்

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த போது, கச்சா எண்ணெய் இறக்குமதியின் மதிப்பு அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதை அனைத்தையும் விண்ட்ஃபால் வரி மூலம் மத்திய அரசு திணித்தது.

வேதாந்தா குழுமம்

வேதாந்தா குழுமம்

இந்தியாவின் முன்னணி சுரங்கத் தொழிற்துறை நிறுவனமான வேதாந்தா குழுமம் கூடுதல் வரி செலுத்தும் அளவீட்டை ஈடுசெய்வதற்காக அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சுமார் 91 மில்லியன் டாலர் தொகையை நிறுத்தி வைத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட டிசம்பர் காலாண்டு முடிவுகளில் அதன் லாபத்தில் எதிர்பார்த்ததை விட பெரிய வீழ்ச்சியைப் பதிவு செய்தது, எரிபொருள் ஏற்றுமதியின் மீதான விண்ட்ஃபால் வரியால் பாதிக்கப்பட்டது என ரிலையன்ஸ் நிர்வாகம் விளக்கம் கொடுத்தது.

யாரெல்லாம் டார்கெட்

யாரெல்லாம் டார்கெட்

கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரி, கச்சா உற்பத்தியாளர்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ரோஸ்நேப்ட் முதலீட்டில் இயங்கும் நயாரா எனர்ஜி, வேதாந்தா மற்றும் அரசு நடத்தும் ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களை குறிவைக்கிறது. இந்த நிறுவனங்கள் தான் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

யாருக்கு லாபம்

யாருக்கு லாபம்

தற்போது விண்ட்ஃபால் வரி கச்சா எண்ணெய் மீது முழுமையாக ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இந்தியாவில் எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் அதன் ஏற்றுமதியில் லாபத்தை அதிகரிக்க முடியும்.

இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி, வேதாந்தா குழுமம் ஆகியவை கூடுதல் லாபத்தை பெற வாய்ப்பு உள்ளது.

9 மாத வரி விதிப்பு காலம்

9 மாத வரி விதிப்பு காலம்

இந்தியா முதன்முதலில் விண்ட்ஃபால் வரியை ஜூலை 2022 இல் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது விதித்தது. ஜூலை 2022 இல் ஒரு டன்னுக்கு 23,250 ரூபாயாக இருந்த கச்சா எண்ணெய்க்கான விண்ட்ஃபால் வரி-கள் இந்த ஆண்டு மார்ச் 21 நிலவரப்படி டன்னுக்கு ரூ.3,500 ஆகக் குறைந்தன. தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+