சென்னையில் அமைந்துள்ள இறக்குமதி நிறுவனமான வின்டிராக் இன்க், சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக லஞ்சம் கேட்டு துன்புறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் நிறுவனர் பிரவின் கணேசன், கடந்த 45 நாட்களாக இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாகவும், இதன் காரணமாக அக்டோபர் 1, 2025 முதல் இந்தியாவில் இறக்குமதி-ஏற்றுமதி செயல்பாடுகளை நிறுத்துவதாகவும் அறிவித்தார்.

வின்டிராக் இறக்குமதி செய்த பொருட்களை தவறாக வகைப்படுத்தியதாகக் கூறி, லஞ்சம் கோரப்பட்டதாகவும், இது நிறுவனத்தின் வணிகத்தை அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு இரண்டு முறை இத்தகைய புகார்களை பொது வெளியில் வின்டிராக் நிறுவனம் தெரிவித்துள்ளது, இதேபோல் இந்நிறுவனத்தை அதிகாரிகள் பழிவாங்கியதாகவும் நிறுவனர் பிரவின் கூறுகிறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
நிதி அமைச்சகம் நடவடிக்கை:
நிதி அமைச்சகம், வின்டிராக் இன்க்-யின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டுள்ளது. வருமானத்துறை (DoR) மூலம் நியாயமான, வெளிப்படையான மற்றும் உண்மாக விசாரணையை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இதற்காக, DoR-யின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, அதிகாரிகள் மற்றும் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய விசாரணை நடத்துகிறார். இந்த விசாரணை மூலம் மத்திய நிதியமைச்சகம், இந்த விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
சென்னை கஸ்டம்ஸ்:
சென்னை கஸ்டம்ஸ், குற்றச்சாட்டுகளை 'பொய்யானவை' என்று மறுத்து, பொருட்கள் தவறான வகைப்படுத்தப்பட்டதாகவும், அனைத்து செயல்முறைகளும் சட்டப்படி நடந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, வருமானத்துறை விரைவான விசாரணையை உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications