இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ கொரோனா காலத்தில் புதிதாக வர்த்தகத்தைப் பெற முடியாமல் சக நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ThoughtSpot நிறுவனத்திடம் இருந்து 5 ஆண்டுச் சாப்வேர் இண்ஜினியரிங் சேவைகளுக்கான திட்டத்தைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் ThoughtSpot நிறுவனத்தின் சர்ச் மற்றும் அனலிட்டிக்ஸ் தளத்தைப் பெரிய அளவில் மேம்படுத்தும் பணிகளை விப்ரோ செய்ய உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விப்ரோ சேவை தளங்கள்
விப்ரோ மற்றும் ThoughtSpot நிறுவனத்தின் இக்கூட்டணி திட்டத்தில் விப்ரோ தனது இன்ஜினியரிங் பிரிவின் NXT பிரம்வொர்க்-யும், பிராடெக்ட் POD தளத்தை பயன்படுத்தி மென்பொருள் சேவையை ThoughtSpot நிறுவனத்திற்கு மிகலும் வேகமாகவும், பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் அளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப சேவை
ThoughtSpot நிறுவனம் ஒரு அனலிட்டிக்ஸ் தளம், இத்தளத்தில் வாடிக்கையாளர்கள் ரியல் டைம் பிஸ்னஸ் டேட்டாவை ஆய்வு செய்து பல பிரிவுக்குப் பகிர்மானம் செய்யும் சேவையை அளித்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சேலையில் சர்ச் மற்றும் செயற்கை நுண்ணறிவு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அமெரிக்க வர்த்தகம்
வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகச் சந்தையில் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது என்பது மிகவும் கடினமாக ஒன்றாக மாறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ThoughtSpot நிறுவனம் விப்ரோ-வை தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது கூட்டணி ThoughtSpot நிறுவனத்தின் சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவை
இதேபோல் ThoughtSpot நிறுவனத்துடனான கூட்டணி எங்களது செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவை விரிவாக்கத்திற்குப் பெரிய அளவில் உதவும். மேலும் அமெரிக்காவில் எங்களது வர்த்தகத்தை வலிமையாக்கவும் இக்கூட்டணி உதவும் என விப்ரோ நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் ஹர்மீட் சவ்கான் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு
புதிய வர்த்தகத்திற்காகப் போட்டிப் போட்டு வரும் விப்ரோ லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் வர்த்தகப் பாதிப்புக் காரணமாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிய ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்வு அளிக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதனால் இந்நிறுவன ஊழியர்கள் சோகத்தில் மூழ்கினர்.
டிசம்பர் 1
இந்நிலையில் சக ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசில் போல் பல்வேறு மாற்றங்கள், புதிய வர்த்தகம், லாபம் அதிகரிப்பு ஆகியவற்றின் எதிரொலியாக விப்ரோ நிறுவனம் தனது 1.5 ஊழியர்களுக்கு வருகிற டிசம்பர் 1முதல் சம்பள உயர்வை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் 3.40 சதவீதம் சரிந்து 2,465,70 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் லாப அளவீடுகள் சரிந்திருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய வர்த்தகச் சூழ்நிலைக்குக் கிட்டதட்ட திரும்பியுள்ளது என்பது தான் முக்கியமான தகவலாக உள்ளது.
ஐடி பங்குகள்
அமெரிக்கத் தேர்தல் எதிரொலியால் சிறப்பான வர்த்தக வளர்ச்சி அடைந்து வந்த ஐடி நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் லாப நோக்கத்திற்காக முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications