இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, காப்பீட்டுத் துறை டெக் சேவையில் குறிப்பாகச் சொத்து மற்றும் விபத்து (பி&சி) இன்சூரன்ஸ் துறையில் அதன் போட்டித்தன்மையை வலுப்படுத்த, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இன்சூர்டெக் துறை நிறுவனமான ஆக்னே குளோபல் (Aggne Global) நிறுவனத்தில் சுமார் 60 சதவீத பங்குகளை 66 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
2019 இல் நிறுவப்பட்ட இந்த ஆக்னே நிறுவனம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் Tampa மற்றும் இந்தியாவில் ஹைதராபாத் நகரிலும் அலுவலகங்களை வைத்துள்ளது இந்நிறுவனம். இந்நிறுவனத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 230 பேர் தற்போது பணியாற்றி வருகிறார்கள்.

இந்த முதலீட்டின் மூலம், விப்ரோ ஆக்னே நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குதாரராக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் விப்ரோ நிறுவனத்திற்கு P&C இன்சூரன்ஸ் இடத்தில் முக்கியத் திறன்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை (IP) பெறும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
விப்ரோ மற்றும் அக்னே கூட்டணி பி&சி துறையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான சேவைகளை, திறன்மிக்க வகையில் அளிக்க முடியும் என்று விப்ரோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் விப்ரோ வெளியிட்ட அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விப்ரோ நிர்வாகம் தனது மார்ஜின் அளவுகளை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது, இதனால் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு ஆன்சைட்டில் அதாவது வெளிநாட்டில் பணியாற்றும் மிட்-லெவல் பதவிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.
சரி இதற்கும் தற்போது விப்ரோ கைப்பற்றியுள்ள இன்சூர்டெக் துறை நிறுவனமான ஆக்னே குளோபலுக்கும் தொடர்பு உள்ளதா..? என்றால் உள்ளது. தற்போது விப்ரோ பணிநீக்கம் செய்யும் மிட்-லெவல் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் CAPCO நிறுவனத்திலிருந்து தான்.
விப்ரோ 2021 ஆம் ஆண்டுக் கன்சல்டிங் நிறுவனமான CAPCO-வை சுமார் 1.45 பில்லியன் டாலருக்கு வாங்கியது, இது விப்ரோ தியரி டெலாபோர்டே தலைமையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவாகும்.
விப்ரோ, CAPCO ஆன்சைட் வர்த்தகத்தில் அதிகளவிலான சம்பளம் பெறும் ஊழியர்கள் அதிகமாக உள்ளனர், இப்பிரிவில் இருந்து வருமானம், வளர்ச்சி ஆகியவை வந்தாலும் போதுமானதாக இல்லை. விப்ரோ நிறுவனத்தின் மார்ஜின் அளவை உயர்த்தும் பொருட்டு, இந்தப் பணிநீக்க திட்டத்தை நிர்வாகம் செயல்படுத்தத் துவங்கியுள்ளது.
விப்ரோ தற்போது கைப்பற்றியுள்ள ஆக்னே குளோபல் நிறுவனம் சார்பாக அமெரிக்கா மற்றும் ஹைதராபாத்தில் 230 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வரும் வேளையில் அதிக எண்ணிக்கையிலான பணிநீக்கம் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப் பணிநீக்கம் இருந்தாலும் ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கும், மேலும் விப்ரோ ஆக்னே குளோபல் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றாத காரணத்தால் இதன் மார்ஜின் பாதிப்பு விப்ரோவுக்கு இருக்காது. இதேபோல் பணிநீக்கம் செய்யும் திட்டத்தை இப்போதே எடுக்காது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications