இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் வர்த்தகப் பாதிப்புக் காரணமாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிய ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்வு அளிக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
பல்வேறு மாற்றங்கள், புதிய வர்த்தகம், லாபம் அதிகரிப்பு ஆகியவற்றின் எதிரொலியாக விப்ரோ நிறுவனம் தனது 1.5 ஊழியர்களுக்கு வருகிற டிசம்பர் 1முதல் சம்பள உயர்வை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் விப்ரோ நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் அதேவேளையில் இந்தச் சம்பள உயர்வு 80 சதவீதம் பேருக்குத் தான் என்றும் விப்ரோ அறிவித்துள்ள நிலையில் யார் இந்த 20 சதவீத ஊழியர்கள் என்ற கேள்வி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பி3 ஊழியர்கள்
பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் விப்ரோ பி3 மற்றும் அதற்குக் கீழ் உள்ள ஊழியர்கள் பரிவுகளுக்கு மட்டும் சம்பள உயர்வு கொடுப்பதாகவும், இந்த மீதமுள்ள ஊழியர்களுக்கான உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வு கொடுக்க ஆலோசனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் வர்த்தகம் எவ்விதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஊழியர்களுக்கு இந்தச் சம்பள உயர்வு கொடுக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது விப்ரோ.
1 இலக்கு சம்பள உயர்வு
இதுமட்டும் அல்லாமல் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கொடுக்கப்படும் சம்பள உயர்வு அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே என்பதால் ஒற்றை இலக்குச் சதவீதத்தில் சம்பள உயர்வு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது விப்ரோ.
இந்திய ஐடி நிறுவனங்கள்
சராசரியாக இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் 6 முதல் 10 சதவீதம் சம்பள உயர்வு கொடுப்பது வழக்கம். விப்ரோ தற்போது ஒற்றை இலக்கு சதவீத சம்பள உயர்வு என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்ட நிலையில் அதிகப்படியாக 9 சதவீதம் மட்டுமே சம்பள உயர்வாகக் கிடைக்கும்.
1.5 லட்சம் ஊழியர்கள்
விப்ரோ நிறுவனத்தில் தற்போது 1.85 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது பி3, பி2, பி1 ஆகிய பேண்டுகளில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பி3 பேண்டுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகள் இந்த வருடம் சம்பள உயர்வு அளிக்கப்படமாட்டாது. இதனால் 80 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வை விப்ரோ அறிவித்துள்ளது. இதன் வாயிலாக 1.85 லட்ச ஊழியர்களில் 1.50 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு.
முன்னணி ஐடி நிறுவனங்கள்
கொரோனா காலத்தில் விப்ரோ மட்டும் அல்லாமல் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், போன்ற முன்னணி நிறுவனங்களும் சம்பள உயர்வு அளிக்க முடியாத நிலையில் தள்ளப்பட்டு உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டிசிஎஸ் அக்டோபர் மாதத்திலும், இன்போசிஸ் ஜனவரி மாதத்திலும் சம்பள உயர்வு அளிக்கப்படும் என அறிவித்த தொடர்ந்து விப்ரோ தற்போது அறிவித்துள்ள.
காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் 3.40 சதவீதம் சரிந்து 2,465,70 கோடி ரூபாயாக இருந்தது.
விப்ரோ நிறுவனத்தின் லாப அளவீடுகள் சரிந்திருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய வர்த்தகச் சூழ்நிலைக்குக் கிட்டதட்ட திரும்பியுள்ளது என்பது தான் முக்கியமான தகவலாக உள்ளது.


Click it and Unblock the Notifications