இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தனது ஊழியர்களை வேறு நிறுவனத்தில் பணியாற்றுவதையும், பணியை விட்டு ராஜினாமா செய்வதையும் தடுக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் வேரியபிள் பே மிகவும் முக்கியமான பிரச்சனையாக ஐடி ஊழியர்கள் மத்தியில் மாறியுள்ளது.
ஐடி நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைத்து மார்ஜின் அளவுகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கும் இந்த நேரத்தில் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களின் வேரியபிள் பே தொகையில் கை வைத்து வருகிறது.
இந்த நிலையில் விப்ரோ தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
விப்ரோ
இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ கடந்த காலாண்டில் லாப அளவீடுகளை அதிகரித்துக் கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக அதிகப்படியான ஊழியர்களின் வேரியபிள் பே தொகையைக் குறைத்த நிலையில், செப்டம்பர் காலாண்டுக்கான வேரியபிள் பே குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வேரியபிள் பே
இந்தியாவின் டாப் 5 ஐடி சேவை நிறுவனத்தில் விப்ரோ அதிகப்படியான சரிவுகளை எதிர்கொண்டு இருக்கும் நிலையிலும் செப்டம்பர் காலாண்டில் A முதல் B3 வரையிலான அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் முழு வேரியபிள் பே தொகையை அளிப்பதாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டு
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 14.6 சதவீதம் வரையிலான வருவாய் வளர்ச்சியைப் பதவி செய்துள்ள காரணத்தால் பிரஷ்ஷர்கள் முதல் டீம் லீடர் வரையில் அனைத்து ஊழியர்களுக்கும் வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது, ஜூன் காலாண்டில் 85 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
100% வேரியபிள் பே
பிரஷ்ஷர்கள் முதல் டீம் லீடர் ஊழியர்களுக்கு 100% வேரியபிள் பே அளிக்கப்படும் நிலையில் தாண்டி மற்ற பிரிவு ஊழியர்களுக்கு அவரவர் செயல்திறன் அடிப்படையில் வேரியபிள் பே அளிக்கப்படும்.
செயல்திறன் 93.5 சதவீதம்
விப்ரோ நிறுவனத்தின் கணக்கு படி செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் செயல்திறன் 93.5 சதவீதமாக இருக்கும் நிலையில், ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் 1.07 மடங்கு வேரியபிள் பே தொகையை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விப்ரோ ஊழியர்கள்
இந்த அளவீடு தான் ஊழியர்களின் வேரியபிள் பே தொகையைக் கணக்கிட உதவும் அடிப்படையாக உள்ளது. விப்ரோ ஊழியர்கள் இந்தச் செப்டம்பர் மாத வேரியபிள் பே தொகையை நவம்பர் மாத சம்பளத்தில் பெறுவார்கள் எனத் தெரிகிறது.
16000 பேருக்குப் பதவி உயர்வு
இது மட்டும் அல்லாமல் இந்த ஆண்டு விப்ரோ நிறுவனம் ஊழியர்களைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக 16000 பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது, பதவி உயர்வு என்றால் சம்பள உயர்வும் இருக்கும். சமீபத்தில் விப்ரோ தனது வருடாந்திர பதவி உயர்வு பணிகளைக் காலாண்டு அடிப்படையில் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
இந்தியாவின் டாப் ஐடி சேவை நிறுவனமான டிசிஸ் செப்டம்பர் காலாண்டில் 100 சதவீத வேரியபிள் பே தொகையைச் சுமார் 70 சதவீத ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாகவும், மற்ற ஊழியர்களுக்கு அவர்களது வேலைத் திறன் அடிப்படையில் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் இன்போசிஸ்....
சம்பளம் கட்.. இன்போசிஸ் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..! யாருக்கெல்லாம் பாதிப்பு..?
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications