சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீனிவாஸ் பள்ளியா தெரிவித்துள்ளார்.
விப்ரோ நிறுவனத்தின் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீனிவாஸ் பள்ளியா ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

ஊதிய உயர்வு காரணமாக செலவினம் அதிகரித்தாலும் தங்கள் நிறுவனத்திடம் செயல்பாட்டுக்கு போதிய நிதி இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த முறை ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிட்ட ஒன்பது மாதத்திலேயே மீண்டும் ஒரு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதை சற்றே தள்ளி வைத்திருந்தன. மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு தேவையான நிதியை சமன்படுத்த இப்படி ஒரு முடிவினை அறிவித்திருந்தன. தற்போது படிப்படியாக ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிடுகின்றன. டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு இரண்டாவது காலாண்டில் ஊதிய உயர்வினை அறிவித்தது.
ஹெசிஎல் டெக் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் இருந்து 7 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்தது. மேலும் சிறந்த முறையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 12 முதல் 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் ஜூனியர் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்தும் மற்றவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்தும் ஊதிய உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு காணப்பட்ட மந்தநிலையை தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதை தாமதப்படுத்தின என விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான அபர்ணா ஐயர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை மனிதவள துறை அதிகாரியான சவுரவ் கோயல் தங்களுடைய நிறுவனம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு முதல் ஒவ்வொரு காலாண்டிலும் 2500 முதல் 3000 ஃபிரஷர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி இருப்பதாக கூறியுள்ளார். 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் விப்ரோ நிறுவனம் ஆன் மற்றும் ஆஃப் கேம்பஸ் நடைமுறை மூலம் 10,000 முதல் 12,000 ஊழியர்களை புதிதாக வேலைக்கு அமர்ந்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 2,33,889 ஆக இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications