விப்ரோ ஊழியர்கள் மகிழ்ச்சி.. ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது ஊழியர்களுக்குப் புத்தாண்டு பரிசாக, சம்பள உயர்வை வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விப்ரோ நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விப்ரோ நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிஇஓ தியேரி டெலாபோர்ட்டே தலைமையில் இந்நிறுவனம் கடந்த 5 மாதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தையிலிருந்து அதிகளவிலான திட்டங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக விப்ரோ பங்குகள் சுமார் 70 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தில் சம்பள உயர்வு

விப்ரோ நிறுவனத்தில் சம்பள உயர்வு

தியேரி டெலாபோர்ட்டே தலைமையிலான விப்ரோ, தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி B3 பேண்ட் மற்றும் அதற்குக் கீழ் இருக்கும் பேண்ட் ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு கொடுக்க உள்ளது. விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் B3 பிரிவுக்குக் கீழ் இருக்கும் ஊழியர்கள் அளவு சுமார் 80 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

20% சதவீத ஊழியர்கள்

20% சதவீத ஊழியர்கள்

இந்நிலையில் மீதமுள்ள 20 சதவீத ஊழியர்கள் அதாவது மிட் லெவல் C1 பேண்ட் முதல் அதற்கு மேல் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 2021 ஜூன் 1 முதல் சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக 2020ல் விப்ரோ ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சம்பளம் உயர்வு அளவீடு

சம்பளம் உயர்வு அளவீடு

விப்ரோ ஊழியர்கள் அளித்த தகவல் படி இந்நிறுவனத்தின் ஆப்ஷோர் ஊழியர்களுக்கு 6 முதல் 8 சதவீதம் அளவிலான சம்பள உயர்வும், ஆன்சைட் ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் அளவிலான சம்பள உயர்வும் அளிக்கப்பட உள்ளது.

100% வேரியபிள் பே

100% வேரியபிள் பே

மேலும் விப்ரோ நிறுவன ஊழியர்கள் இந்தக் கொரோனா காலகட்டத்தில் சிறப்பான பணிகளைச் செய்து வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் கொண்டு சென்றதை அடுத்து விப்ரோ 2020-21 நிதியாண்டில் 3வது மற்றும் 4வது காலாண்டுக்கான வேரியபிள் பே-வை தனது ஊழியர்களின் 100 சதவீதம் முழுமையாகக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஊழியர்களுக்குப் பதவி உயர்வு

ஊழியர்களுக்குப் பதவி உயர்வு

இதுமட்டும் அல்லாமல் டிசம்பர் 1ஆம் தேதி வெளியான தகவல் படி விப்ரோ நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சுமார் 7000 ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 3 வருடத்தில் பதிவ உயர்வு கொடுக்கப்பட்ட எண்ணிக்கை இந்த வருடம் சற்று அதிகம் என விப்ரோ தெரிவித்துள்ளது.

உயர் அதிகாரி வெளியேற்றம்

உயர் அதிகாரி வெளியேற்றம்

விப்ரோ நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரியான ரோஹித் அட்லகா 25 ஆண்டுகளுக்குப் பின் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். இவர் தலைமை தகவல் அதிகாரி பொறுப்பில் மட்டும் அல்லாமல் தலைமை டிஜிட்டல் அதிகாரியாகவும், விப்ரோ-வின் செயற்கை நுண்ணறிவு தளமான விப்ரோ ஹோல்ம்ஸ் பிரிவின் குளோபல் தலைவராகவும் இருந்தார்.

இவரின் வெளியேற்ற விப்ரோ நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+