உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ என்பதும் இந்நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்நிறுவனம் தனது செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய தலைமை இயக்க அதிகாரியை நியமனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக அமித் செளத்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
விப்ரோ லிமிடெட்
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ லிமிடெட் அதன் தலைமை இயக்க அதிகாரி மற்றும் நிர்வாக குழுவின் உறுப்பினராக கேப்ஜெமினியின் முன்னாள் மூத்த நிர்வாகி அமித் செளத்ரி அவர்களை நியமித்து உள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமித் செளத்ரி
நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட விப்ரோ நிறுவனத்தின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த உதவவும் விரைவில் நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமித் செளத்ரி செயல்படுவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகத்தை மேம்படுத்துவார்
அமித் செளத்ரி அவர்கள் நீண்ட அனுபவம் மற்றும் தனித்துவமான புரிதலுடன் உடையவர் என்றும் விப்ரோ நிறுவனத்தின் பங்குதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர் வணிகத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவது குறித்து திட்டமிடுவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தியரி டெலாபோர்ட்
மேலும் விப்ரோ நிறுவனத்தின் மாற்றத்தை விரிவுபடுத்துவதற்கும், செயல்பாட்டை சிறப்பாக மேம்படுத்துவதற்கும் அமித் செளத்ரி அவர்கள் பொறுப்பு ஏற்பார் என்றும் எங்கள் நிறுவனத்திற்கு எது முக்கியமானது மற்றும் எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறித்து அவர் முடிவு செய்வார் என விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் தியரி டெலாபோர்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீண்ட அனுபவம்
அமித் செளத்ரி அவர்கள் கொல்கத்தாவிலுள்ள ஐஐஎம் மற்றும் கான்பூர் ஐஐடி ஆகிய நிறுவனங்களில் படித்தவர் என்பதும் உலகளாவிய வணிக செயல்பாடுகள் மற்றும் திறன் கொண்டவர் என்றும் அவருடைய அனுபவத்தில் பல மேலாண்மை செயல்பாடுகளை நிரூபித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் விப்ரோவில் இணைவதற்கு முன்பாக அவர் கேப்ஜெமினியில் நிதிச் சேவைகள் வணிகப் பிரிவின் தலைமை இயக்க அதிகாரியாகவும், அதன் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications