தினசரி ரூ.27 கோடி.. இந்தியர்களுக்காக வாரிக் கொடுத்த அசிம் பிரேம்ஜி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர், அசிம் பிரேம்ஜி, கடந்த 2021ம் நிதியாண்டில் ஒரு நாளைக்கு 27 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

இதன் மூலம் வழக்கம்போல இந்தியாவில் அதிக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில், அசிம் பிரேம்ஜி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வசம் உள்ள 5 முக்கிய பங்குகள்.. வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்..! ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வசம் உள்ள 5 முக்கிய பங்குகள்.. வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்..!

இவர் ஒரு நாளைக்கு இருபத்தி ஏழு கோடி ரூபாய் வீதம், கடந்த நிதி ஆண்டில் 9,713 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடையை வாரிக் கொடுத்துள்ளார்.

Array

Array

இதுகுறித்து ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில், விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி தொடர்ந்து தனது நன்கொடையை அதிகரித்துள்ளார்.

அசிம் பிரேம்ஜி அடுத்து இந்தியாவின் மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான ஹெச் சி.எல் டெக் நிறுவனத்தின் ஷிவ்நாடார் உள்ளார். இவர் கடந்த நிதியாண்டில் 1,263 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் முகேஷ் அம்பானி

மூன்றாவது இடத்தில் முகேஷ் அம்பானி

இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய பில்லியனர் ஆன ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 577 கோடி ரூபாய் பங்களிப்புடன், இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதே குமார் மங்கலம் பிர்லா 377 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்து நான்காவது இடத்தில் உள்ளார்.

கவுதம் அதானி எவ்வளவு நன்கொடை

கவுதம் அதானி எவ்வளவு நன்கொடை

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பில்லியனர் ஆன அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, 130 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து எட்டாவது இடத்தில் உள்ளார்.

இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீல்கேனி 183 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்து, ஐந்தாம் இடத்திலும் உள்ளார்.

நந்தன் நீல்கேனி நிலவரம்

நந்தன் நீல்கேனி நிலவரம்

ஹுருன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைவரும் ஆராய்ச்சியாளருமான ரஹ்மான், நாட்டில் அடிப்படைத் தேவைகளான கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மற்றவர்களைவிட இணை நிறுவனர் நந்தன் நீல்கேனி உண்மையில் பல சுவாரசியமான பங்களிப்பை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் புதியவர்கள்

பட்டியலில் புதியவர்கள்

கடந்த ஆண்டு 10-ஆவது இடத்தில் இருந்த நீலகேனி இந்த ஆண்டு அதிக பங்களிப்பு காரணமாக ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் தற்போது புதிதாக பலரும் இணைந்துள்ளார் என்பது மிக மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாகவும் உள்ளது.

இந்தியாவின் வாரன் பஃபெட்

இந்தியாவின் வாரன் பஃபெட்

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, ஒட்டு மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கை கல்விக்காக 50 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறப்பிடத்தக்கது. இதேபோல வளரும் இளம் தொழில் அதிபர்களான நிதின் மற்றும் நிகில் காமத் 35வது இடத்தில் உள்ளனர்.

ஏ எம் நாயக் எவ்வளவு?

ஏ எம் நாயக் எவ்வளவு?

முன்னணி பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ எம் நாயக், 112 கோடி ரூபாய் நன்கொடையுடன் 11 இடத்தில் உள்ளார். இவரின் வருமானத்தில் 75% பொது சேவைகளுக்காக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களும் உண்டு

பெண்களும் உண்டு

ஹிந்துஜா குடும்பம், பஜாஜ் குடும்பம், அணில் அகர்வால் மற்றும் பர்மன் குடும்பம் ஆகியவையும் கணிசமான உதவிகளை வழங்கியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த பட்டியலில் ரோகிணி நீலகிரி உள்ளிட்ட பல பெண்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த நகரத்தில் எவ்வளவு?

எந்த நகரத்தில் எவ்வளவு?

மேலும் தாங்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த 31 சதவிகிதம் பேரும், டெல்லியை சேர்ந்த 17 சதவிகிதம் பேரும், பெங்களூருவில் 10 சதவிகிதம் பேரும் நன்கொடைகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாரளமான மனிதர்

இந்தியாவின் மிக தாராளமான மனிதர்

இந்தியாவின் மிக தாராளமான மனிதர்

இந்தியாவில் பல பில்லியனர்கள் இருந்தாலும் அவர்களுடைய தனித்துவமானவர் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி எனலாம். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மக்களுக்காகவும் கல்வி மற்றும் தொண்டு சேவைகளுக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக தொடர்ந்து வழங்கி வருகிறார். இதனால் இந்தியாவின் most generous man என்றும் இவரை மக்கள் அழைப்பது உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro Azim Premji Donated Rs.27 crore per day in last financial year

Wipro Azim Premji Donated Rs.27 crore per day in last financial year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X