இந்தியாவில் உருவாகியுள்ள 2வது கொரோனா அலையில் பல லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்து போதுமான மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து வருகின்றனர். இன்றளவும் பல மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் சாமானிய மக்கள் முதல் பெரும் நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை அதிகளவில் செய்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஒருவர் செய்யும் சேவை, நன்கொடை இந்தக் கொரோனா அலையில் மாயமாகியுள்ளது.
ஆனால் டிவிட்டர் வாசிகள் அதைக் கண்டுகொண்டு மழை போல் வாழ்த்தி வருகின்றனர்.
விப்ரோ அசிம் பிரேம்ஜி
இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் மத்தியில் விப்ரோ அசிம் பிரேம்ஜி மட்டும் தனியாக இருப்பார். விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றிய இவர் தற்போது வர்த்தகத்திலும் நிறுவன முடிவுகளில் ஈடுபடுவது இல்லை. ஆனால் பல ஆண்டுகளாகச் செய்து வரும் நன்கொடைகள் இதுவரை நிறுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அசிம் பிரேம்ஜி
இந்திய மக்களின் நலனுக்காகவும், கல்வித் துறையிலும் இவர் செய்ய நன்கொடை மூலமாகவே டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் உயரிய இடத்தில் இருந்து சரிந்தார் அசிம் பிரேம்ஜி. இதற்காகவே இவரை இந்தியாவின் வாரன் பபெட் என்றும் 'most generous man' என்று செல்லமாக அழைப்பது உண்டு.
தினமும் 22 கோடி ரூபாய் நன்கொடை
EdelGive ஹூரன் இந்தியாவின் Philanthropy பட்டியல் 2020படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பை எதிர்க்க விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அசிம் பிரேம்ஜி சராசரியாக ஒரு நாளுக்கு 22 கோடி ரூபாய் நன்கொடை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 7,904 கோடி ரூபாய் நன்கொடை
இதன் மூலம் விப்ரோ அசிம் பிரேம்ஜி தனது அறக்கட்டளை, விப்ரோ, விப்ரோ எண்டர்பிரைசர்ஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் சுமார் 7,904 கோடி ரூபாய் அளவிலான தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இவருடைய சொத்தில் பெரும் பகுதியை நன்கொடையாகக் கொடுத்த மாமனிதர் அசிம் பிரேம்ஜி.
வைரம் போன்ற அசிம் பிரேம்ஜி
இந்தியா பல நிறுவனங்கள், தலைவர்கள் கொரோனா எதிராகப் போராடப் பல உதவிகளையும் நன்கொடைகளையும் அளித்து வருவது செய்திகளின் வாயிலாகவோ அல்லது நிறுவன அறிக்கையின் வாயிலாகவோ வெளிச்சத்திற்கு வருகிறது. ஆனால் அசிம் பிரேம்ஜியின் செயல் மீடியா வெளிச்சத்தில் படாத ஒரு வைரம் போல் உள்ளது என்றால் மிகையில்லை.
டிவிட்டரில் மக்கள் புகழாரம்
இந்நிலையில் தற்போது டிவிட்டரில் மக்கள் இவரைப் புகழ்ந்து தள்ளி வருகிறனர். இப்படிப் பலரது கவனத்தை ஈர்த்த டிவீட்கள் உங்கள் பார்வைக்கு.


Click it and Unblock the Notifications