விமானத்தை அல்ல.. விமான நிறுவனத்தையே வாங்கும் விப்ரோ அசிம் பிரேம்ஜி.. அடேங்கப்பா..!!

இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தற்போது பல பெரும் தலைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் ரேர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இதில் முதலீடு செய்துள்ளது மூலம் நற்பெயர் பெற்றுள்ள நிலையில், தற்போது அடுத்த சுற்று முதலீட்டு திரட்டலில் பெரும் தலைகள் வர துவங்கியுள்ளனர்.

நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அசிம் பிரேம்ஜி-யின் சொந்த முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் மணிப்பால் குழுமத்தின் குடும்ப முதலீட்டு நிறுவனமான கிளேபாண்ட் கேபிடல் உள்ளிட்ட முன்னணி முதலீட்டாளர்கள் சுமார் 130-140 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 1000 கோடி) முதலீட்டைப் செய்ய உள்ளனர்.

விமானத்தை அல்ல.. விமான நிறுவனத்தையே வாங்கும் விப்ரோ அசிம் பிரேம்ஜி.. அடேங்கப்பா..!!

இந்த முதலீட்டின் மூலம், விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜியின் குடும்ப முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் மணிப்பால் குழுமத்தின் தலைவர் ரஞ்சன் பாய் அவர்களின் குடும்ப முதலீட்டு நிறுவனமான கிளேபாண்ட் கேபிடல் ஆகியவை ஆகாசா ஏரில் கணிசமான சிறுபான்மை பங்குகளைப் பெறுவது மட்டும் அல்லாமல் நிர்வாக குழுவில் இடத்தையும் பெற உள்ளதாக தெரிகிறது.

முன்னாள் பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகாசா ஏர் நிறுவனத்தின் ஆரம்பகால முதலீட்டாளர்களில் ஒருவர். இந்த நிலையில் ஜூன்ஜூன்வாலா குடும்பமும் இந்த புதிய முதலீட்டுச் சுற்றில் பங்கேற்று, ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை இரண்டு மடங்கு அதிகரிக்க உள்ளது.

ஒரே நேரத்தில் 3 பெரிய தலைகள் ஆகாசா ஏர் நிறுவனத்தின் மீது முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவது இந்நிறுவனத்தின் மூலம் முதலீட்டு சந்தையில் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது. இதேபோல் நிறுவனத்தின் நிதியியல் அடிப்படையும் சிறப்பாக இருப்பதை காட்டுகிறது.

ஆகாசா ஏர் மற்றும் முதலீட்டு குழுவிற்கு இடையிலான ஒப்பந்தம் இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தானதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்க்தை அக்டோபர் மாதமே துவங்கியது, இதுக்குறித்து தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது அசிம் பிரேம்ஜி முதலீடு செய்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த முதலீட்டு சுற்று குறித்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறினாலும், பிரேம்ஜி இன்வெஸ்ட், கிளேபாண்ட் கேபிடல், அகாசா ஏர் ஆகியோரிடம் இருந்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை.


இந்த முதலீடு உறுதி செய்யப்பட்டால் இந்திய போட்டி ஆணையத்திடம் (CCI) ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்று முதலீட்டு தொகை பெறப்படும். ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளின் போது, ஆகாசா ஏர் நிறுவனத்தின் மதிப்பு 350 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் இந்த ஒப்பந்தம் சற்று குறைந்த மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு உள்ளது.

தனியார் சந்தை தரவு தளமான ட்ராக்சன் தகவல்களின்படி, ஆகாசா ஏர் நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் சுமார் 86 மில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. தற்போது 350 டாலருக்கு மதிப்பட்டு உள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் ஆகாசா ஏர் நிறுவனம் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவும், புதிய வழித்தடங்களில் விமான சேவையை அறிமுகப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்த கட்டண விமானச் சந்தையில் கடுமையான போட்டி நிலவும் நிலையில், இந்த முதலீடு ஆகாசா ஏர் நிறுவனத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஏர் இந்தியா, இண்டிகோ போன்றவை வெளிநாட்டு சேவை, நீண்ட தூர பயண சேவை, உயர்தர சேவையில் கவனம் செலுத்த துவங்கியுள்ள நிலையில் ஆகாசா ஏர்-க்கு இது ஜாக்பாட் ஆகவே இருக்கும் என கணக்கிடப்படுவதால் மட்டுமே 3 பெரும் முதலீட்டாளர்களும் களத்தில் ஆர்வமாக குதித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+