இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ 2024ஆம் நிதியாண்டின் மார்ச் காலாண்டு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இக்காலாண்டின் முடிவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
மார்ச் 2023 காலாண்டில் ரூ.3,074 கோடி லாபம் ஈட்டிய விப்ரோ நிறுவனம், மார்ச் 2024 ரூ.2,835 கோடி லாபத்தை மட்டுமே ஈட்டியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் லாபம் குறைந்துள்ளது. இதேபோல் 2023 மார்ச் காலாண்டில் ரூ.23,190 கோடி வருவாய் ஈட்டியிருந்த விப்ரோ நிறுவனம், இந்த ஆண்டு ரூ.22,208 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் 4 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது.

இந்த நிலையில் விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது மூத்த மகன் ரிஷாத் பிரேம்ஜி ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக விப்ரோ நிர்வாகம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நியமனம், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
விப்ரோ நிறுவனத்திற்கு புதிய சிஇஓ கிடைத்துள்ள நிலையில் உயர்மட்ட நிர்வாகத்தில் அசிம் பிரேம்ஜி மற்றும் ரிஷாத் பிரேம்ஜி ஆகியோரின் நியமனம் மிகவும் முக்கியமானது.
இந்த மறுநியமனத்தில், அசிம் பிரேம்ஜி, அடுத்த 5 வருடத்திற்கு விப்ரோ நிறுவனத்தின் செயல்பாடற்ற, தனிப்பட்ட இயக்குநராக (Non-Executive, Non-Independent Director) நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது, நிறுவனத்தின் நிர்வாகப் பணிகளில் நேரடியாக ஈடுபடாமல், தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகள் மூலம் வழிகாட்டுவார்.
இதேபோல் ரிஷாத் பிரேம்ஜி அடுத்த 5 வருடத்திற்கு அதாவது 2029 ஆம் ஆண்டு வரை விப்ரோ நிறுவனத்தின் நிர்வாக தலைமைச் (Executive Chairman) பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரிஷாத் பிரேம்ஜி 2007 ஆம் ஆண்டில் விப்ரோ நிறுவனத்தின் பணியில் சேர்ந்தார். பின்னர், பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற பின்னர் 2019 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நிர்வாக தலைமைச் பதவிக்கு உயர்ந்தார்.
விப்ரோவில் பணியைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் பொது மேலாளராக இருந்த ரிஷாத் பிரேம்ஜி, பின்னர் முதலீட்டாளர் உறவுகள் துறைக்கு மாறினார்.
இதை தொடர்ந்து, விப்ரோவின் திட்டமிடல் மற்றும் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (M&A) பிரிவை வழிநடத்தினார். தலைமை திட்டமிடல் அதிகாரியாக (Chief Strategy Officer) இருந்த காலத்தில், விப்ரோ தொழில்நுட்பங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக $250 மில்லியன் நிதியுதவி அளிக்கும் "விப்ரோ வென்ச்சர்ஸ்" (Wipro Ventures) என்ற பிரிவை தொடங்கியது இவரின் பணிகளில் மிகவும் முக்கியமானது. மேலும், முதலீட்டாளர்கள் மற்றும் அரசு உறவுகளையும் கவனித்து வந்தார்.
1960 களின் பிற்பகுதியில் அசிம் பிரேம்ஜி தனது தந்தையிடம் இருந்து விப்ரோ நிறுவனத்தை ஏற்று நடத்தத் தொடங்கினார். தற்போது 65 நாடுகளில் $10.5 பில்லியன் வருவாய் ஈட்டும் ஐடி சேவை நிறுவனமாக விப்ரோ உருவாகியுள்ளார். அசிம் பிரேம்ஜி 2019ல் தனது பதவியை ராஜினாமா செய்த பின்பு தான் ரிஷாத் பிரேம்ஜி நிர்வாக தலைவர் பதவியை பெற்றார். தற்போது மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications