4வது இடத்தை பிடித்த விப்ரோ.. காக்னிசென்ட் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய இந்திய ஐடி நிறுவனம்..!

2020 லாக்டவுன் காலத்தில் வர்த்தகத்தை எப்படி நடத்துவது எனக் குழப்பத்தில் ஐடி நிறுவனங்கள் இருந்த நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ மிகவும் ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டு தனது அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாகவும், புதிய வர்த்தகத்தைப் பெரிய அளவில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் புதிய சிஇஓவாக Thierry Delaporte நியமித்தது.

இவரது நியமனத்திற்குப் பின் நிர்வாகத்தில் பல புதிய மாற்றங்களைச் செய்தது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது விப்ரோ, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து எக்கசக்கமான வர்த்தகத்தைப் புதிதாகப் பெற்றுள்ளது.

விப்ரோவின் இந்த அதிரடியான வளர்ச்சி, விப்ரோ நிறுவனத்தை உலகின் 4வது பெரிய ஐடி நிறுவனமான உயர்த்தியுள்ளது.

 ஐடி சேவை துறை

ஐடி சேவை துறை

உலகளவில் ஐடி சேவை அளிக்கும் டாப் 5 நிறுவனங்கள் பட்டியலில் இன்றைய காலத்தில் இடம்பெறுவது என்பது மிகவும் சவாலான காரியும். ஒருபக்கம் பெரு நிறுவனங்கள் மத்தியிலேயே கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் பல ஸ்டார்ட்அப் மற்றும் டெக் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 விப்ரோ அசத்தல்

விப்ரோ அசத்தல்

இந்த நிலையில் சந்தை மதிப்பீடு படி விப்ரோ நிறுவனம் காக்னிசென்ட் நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலில் அக்சென்சர், டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

 நியூயார்க்-ல் விப்ரோ நிறுவனப் பங்கு விலை

நியூயார்க்-ல் விப்ரோ நிறுவனப் பங்கு விலை

நியூயார்க் பங்குச்சந்தையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை 1.92 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 7.45 டாலர் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 38.1 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதேபோல் காக்னிசென்ட் பங்குகள் வளர்ச்சி அடைந்திருந்தாலும் சந்தை மதிப்பீடு 37.7 பில்லியன் டாலராக இருந்த காரணத்தால் விப்ரோ 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

 வருவாய் அளவீடு

வருவாய் அளவீடு

ஆனால் வருவாய் அளவீடு என்று பார்த்தால் காக்னிசென்ட் நிறுவனம் 2020ஆம் ஆண்டில் 16.5 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ள நிலையில், விப்ரோ மார்ச் 31 முடிவில் 8.1 பில்லியன் டாலராக உள்ளது. சந்தையில் பொதுவாகக் கணக்கிடப்படுவது முதலீட்டாளர்களின் முதலீட்டு ஆதாயத்தைக் கணிக்கும் சந்தை மதிப்பீடு தான்.

 டாப் 5 நிறுவனங்கள்

டாப் 5 நிறுவனங்கள்

இதன் அடிப்படையில் அக்சென்சர் 181 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் முதல் இடத்திலும், டிசிஎஸ் 156 பில்லியன் டாலர், இன்போசிஸ் 78 பில்லியன் டாலர், விப்ரோ 38.1 பில்லியன் டாலர், காக்னிசென்ட் 37.7 பில்லியன் டாலர், கேப்ஜெமினி 31 பில்லியன் டாலர் என அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+