இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது வர்த்தகத்தை மேம்படுத்தப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
இதில் குறிப்பாக 2020ல் விப்ரோ நிர்வாகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியர் அல்லாத Thierry Delaporte-வை சிஇஓவாக நியமித்தது சக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இந்நிலையில் தற்போது தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் குறிப்பாக ஐரோப்பியச் சந்தையைக் குறிவைத்து தனது பல முக்கியமான முடிவுகளை எடுத்து வரும் நிலையில், தற்போது லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் கேப்கோ நிறுவனத்தை மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த கேப்கோ
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் குளோபல் மேனேஜ்மென்ட் மற்றும் டெக் கண்சல்டன்சி நிறுவனமான கேப்கோ-வை சுமார் 1.45 பில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. கேப்கோ நிறுவனம் வங்கி, நிதியியல் சேவை மற்றும் இன்சூரன்ஸ் (BFSI) பிரிவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் வைத்துள்ளது.
1.45 பில்லியன் டாலர் டீல்
இந்திய ஐடி துறையில் 1980 முதல் இயங்கி வரும் விப்ரோ நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காகப் பல நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆனால் விப்ரோ வரலாற்றிலேயே 1.45 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியது இதுதான் முதல் முறை. இதன் மூலம் விப்ரோவின் மிகவும் காஸ்ட்லியான கைப்பற்றல் ஆக விளங்குகிறது கேப்கோ.
விப்ரோ நிறுவனப் பங்குகள்
2020ல் ஜூலை மாதம் விப்ரோ இந்திய ஐடி நிறுவனம் இதுவரை எடுத்திராத ஒரு முக்கியமான முடிவை எடுத்து இந்தியர் அல்லாத வெளிநாட்டவரை சிஇஓ-வாக நியமித்தது. இதைத் தொடர்ந்து Thierry Delaporte சிஇஓ-வாகப் பதவியேற்றிய நாளில் இருந்து விப்ரோ நிறுவனப் பங்குகள் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.
விப்ரோ பின்னடைவு
மேலும் சக போட்டி நிறுவனங்கள் மத்தியில் விப்ரோ இழந்த தனது ஆதிக்கத்தையும் இடத்தையும் Thierry Delaporte நியமனத்திற்குப் பின் விப்ரோ பெறத் துவங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் BFSI பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில் விப்ரோ நீண்ட காலமாக இதில் பின்தங்கியுள்ளது.
BFSI பிரிவு வர்த்தகம்
இந்நிலையில் கேப்கோ நிறுவனத்தின் கைப்பற்றல் மூலம் BFSI பிரிவு வர்த்தகப் பிரிவில் டிசிஎஸ் ,இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்கள் மத்தியிலான இடைவெளியைத் தீர்க்க முடியும் என விப்ரோ நம்புகிறது. இதன் வாயிலாகவே 1.45 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகை கொண்டு லண்டன் நிறுவனமான கேப்கோ-வை கைப்பற்றியுள்ளது.
விப்ரோ கைப்பற்றிய நிறுவனங்கள்
விப்ரோ இதற்கு முன் 2016ல் அமெரிக்கக் கிளவுட் கண்சல்டன்சி நிறுவனமான Appirio-வை 500 மில்லியன் டாலருக்கும், 2007ல் பிரிட்டன் நாட்டின் இன்போகிராசிங் நிறுவனத்தை 600 மில்லியன் டாலருக்கும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
BFSI வருமானத்தில் பெரும் வித்தியாசம்
டிசிஎஸ், காக்னிசென்ட், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் BFSI பிரிவு வர்த்தகம் வாயிலாகக் குறைந்தபட்சம் 1000 மில்லியன் டாலர் முதல் 1800 மில்லியன் டாலர் மதிப்பிலான வருமானத்தைப் பெற்று வரும் நிலையில் விப்ரோ வெறும் 632 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்று வருகிறது. இந்த வித்தியாசத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே கேப்கோ நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
கேப்கோ-வின் 2020 வருமானம்
2020ல் மட்டும் கேப்கோ நிறுவனம் 700 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, இந்நிறுவன கைப்பற்றல் மூலம் சர்வதேச நிதியியல் சேவை பிரிவு வர்த்தகம் மூலம் விப்ரோ நிறுவனத்தின் 2.5 பில்லியன் டாலர் வர்த்தகத்தை 3.2 பில்லியன் டாலர் வரையில் உயர உள்ளது. இதோடு கண்சல்டிங் சேவையை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்படும்.
இதுமட்டும் அல்லாமல் கேப்கோ நிறுவனத்திடம் சுமார் 30 பெரும் நிதியியல் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டு உள்ளது.
புதிய சிஇஓ நியமனம்
Thierry Delaporte நியமனத்திற்கு முன் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் அதிகப்படியாக 300 ரூபாய் வரையில் மட்டுமே அடைந்திருந்த நிலையில், மார்ச் லாக்டவுன் மற்றும் புதிய சிஇஓ நியமனத்திற்குப் பின் விப்ரோ பங்குகள் 467.45 ரூபாய் என்ற உயர்வை அடைந்தது.
150 சதவீத வளர்ச்சி
குறிப்பாக லாக்டவுன் அறிவிப்பின் போது விப்ரோ பங்குகளின் விலை 150 ரூபாய் வரையில் குறைந்தது. ஆனால் இப்போது கிட்டதட்ட 150 சதவீத வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications